ஜேம்சு சுடேன்லி கே

ஜேம்சு சுடேன்லி கே (James Stanley Hey) ஓர் அரசு கழக ஆய்வுறுப்பினரும் [1] (3 May 1909 – 27 February 2000) ஆங்கிலேய இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இராடார் தொழில்நுட்பத்தை வானியல் ஆய்வுக்குப் பயன்படுத்தி, இவர் கதிர்வீச்சு வானியலுக்கான அடிப்படைகளை உருவாக்கினார் . இவர் சூரியன் கதிர்வீச்சு அலைகளை உமிழ்வதைக் கண்டுபிடித்தார். அதேபோல, இவர் சிக்னசு விண்மீன்குழுவில் பால்வெளிக்கப்பாலான ஓர் கதிர்வீச்சு அலைவாயிலையும் முதன்முறையாகக் கண்டறிந்தார் .

வாழ்க்கை

[தொகு]

இவர் பருத்தித் தொழில் வளர்ந்த இலங்காசயரின் ஒரு பருத்தித் தொழிலதிபருக்கு மூன்றாம் மகனாக அந்நகரின் நெல்சன் பகுதியில் பிறந்தார். இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் சேர்ந்து பயின்று 1930 இல் இளவல் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு X-கதிர் படிகவியலில் முதுவர் பட்டம் பெற்றார். இவரது மனைவியார் எடுனா கே வுட் இவரிடம் பயின்ற மாணவி ஆவார்.[2] இவர் அப்போது இயற்பியல் ஆசிரியராக, வடக்கு இலக்கணப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் 1942 இல் படைத்துறை கதிர்வீச்சுப் பள்ளியில் ஆறுவாரம் பயிற்சி பெற்றதும், படைத்துறைச் செயல்முறை ஆராய்ச்சிக் குழுவில் சேர்ந்தார். இக்குழுவில் இவரது பணி இராடார் நெறிப்புத்தடுப்பு முறைகளை உருவாக்குதலாகும்; முதல் ஓராண்டு வரையில் கூட்டணிப் படைக்குச் செருமனியின் இராடார் நெறிப்பைத் தடுப்பது இயலாத செயலாகவே விளங்கியது . 1942 இல் பிரெஞ்சுக் கடற்கரையில் அமைந்த பகைவர் இராடார் நெறிப்பினால், ஆங்கிலக் கால்வாயில் இருந்து சுகாம்கார்சுட்டு, நீசனவு ஆகிய செருமனி போர்க்கலங்களின் தப்பித்தது, இச்சிக்கலின் தன்மையை விளக்கும். இவருக்கு, 4-8 மீ நெடுக்கத்தில் பகைவரின் வான்கல எதிர்ப்பு இராடாரின் கடுமையான இரைச்சல் நெறிப்பைப் பற்றிய அறிக்கைகள் கிடைத்துள்ளன. குறுக்கீட்டின் திசை பெருமமாக சூரியனின் திசையைப் பின்பற்றுவதை உணர்ந்த இவர் கிரீன்விச்சில் உள்ள அரசு வான்காணகத்தின் உதவியால் சரிபார்த்துச் சூரிய வட்டிலில் முனைப்பான கரும்புள்ளி கடந்துசெல்வதைக் கண்டுபிடித்தார். எனவே இவர் சூரியக் கரும்புள்ளிப் பகுதியில் 100 காசு அளவுள்ள காந்தைப்புலத்தில் செல்லும் ஆற்றல்மிக்க மின்னணுக்களும் மின்னன்களும் மீட்டர் அலைநீள நெடுக்கத்தில் கதிர்வீச்சு அலைகளை உமிழ்தலை கண்டறிந்தார். ஐக்கிய அமெரிக்காவில் ஜார்ஜ் கிளார்க் சவுத்வர்த்தும் 1942இல் சூரியனின் கதிர்வீச்சு இரைச்சலைச் செமீ அலைநீள நெடுக்கத்தில் கண்டார்.

பின்னர் 1945 இல் இவர் இலண்டனில் 100 மீ உயரத்தில் கடந்த வி-2 ஏவூர்திகளின் தடங்களைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை ப் பயன்படுத்தினார். அப்போது 100 கி.மீ உயரத்தில் இருந்து மணிக்கு ஐந்து முதல் பத்து வரை நிலைமாறும் தற்காலிக இராடார் எதிரொலிகள் வருவதால் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது. வி-2 ஏவூர்திகள் மறைந்ததும் எதிரொலிகள் வரவில்லை; எனவே இதற்கான காரணம் விண்கற்களின் தொடர்வீழ்ச்சிதான் எனும் முடிவுக்கு இவர் வந்தார். இவ்வீழ்ச்சி இரவில் மட்டுமன்றிப் பகலிலும் நேரலாம்.

இவரது 1942 ஆம் ஆண்டின் முடிவுகள் போர்முடியும் வரையில் வெளியிடப்படவில்லை.

இவர் 1949 இல் படைத்துறைச் செயல்முறை ஆராய்ச்சிக் குழுவின் தலைவரானார். இவர் பின்னர் ஆய்வாளராக, மால்வெர்னில் இருந்த அரசு இராடார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இங்கு இவர் தன் கதிர்வீச்சு வானியல் ஆய்வு நோக்கீடுகளையும் தொடர்ந்தார். இவர் 1966 இல் இருந்து 1969 இல் ஓய்வுபெறும் வரை ஆராய்ச்சித் துறையின் தலைவராக விளங்கினார்.

விருதுகள்

[தொகு]
  • இவர் 1959இல் எடிங்டன் பதக்கத்தைப் பெற்றார்
  • இவ அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆவார்
  • இவர் 1977 இல் கெண்ட் பல்கலைக்கழகத்தின் தகைமை முனைவர் பட்ட்த்தைப் பெற்றார்.
  • குறுங்கோள் (22473) சுடேன்லிகே வான்பொருளுக்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[3]

கே வெளியீடுகள்

[தொகு]

மக்கள் அறிவியல் நூல்கள்

[தொகு]
  • கதிர்வீச்சு அண்டம், முதல் பதிப்பு, 1971
  • அறிவியல் வரலாறுகள் தொடரில், கதிர்வீச்சு வானியலின் படிமலர்ச்சி, 1972

மேற்கோள்கள்

[தொகு]
  1. Antony Hewish (2002). "James Stanley Hey, M.B.E. 3 May 1909 – 27 February 2000". Biographical Memoirs of Fellows of the Royal Society 48: 167. doi:10.1098/rsbm.2002.0010. 
  2. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
  3. http://www.minorplanetcenter.net/db_search/show_object?object_id=22473