ஜேம்சு பிரான்சிசு டெனன்ன்டு (James Francis Tennant), (10 ஜனவரி 1829 – 6 மார்ச்சு 1915) ஓர் ஐக்கிய இராச்சியப் படைவீர்ரும் வானியலாளரும்அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.
இவர் இசுகாட்டியப் பெற்றோருக்குக் கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தையார் படைப்பிரிவுத் தளபதியான சர் ஜேம்சு டெனனன்ட் ஆவார். இவரது தாயார்பாட்டெர்சன் எனப்பட்ட எலிசபெத் ஆவார்.[1] இவர் 1845 முதல் 1847 வரை கிழக்கிந்தியக் குழுமத்தின் அடிசுகோபே படைப்பள்ளியில் படித்தார்.[2] இவர் தன் படைப்பணியை 1847 இல் வங்காளப் பொறியாளர் அணியில் கொல்கத்தாவில் தொடங்கினார்.
இவரது கணிதவியல் திறமை இவரை மாபெரும் முக்கோணவியல் அளக்கைத் திட்டப்பணியில் சேர்த்தது. இப்பணியில் இவர் 1857 இந்தியப் படைவீரர்(சிப்பாய்க்) கலகம் வரை மாபெரும் நெட்டாங்குத் தொடர் அளக்கையில் ஈடுபட்டார். இவர் 1857 இல் படைத் தளவாடப்பணிக்கு அனுப்பப்பட்டார். இவர்1859 இல் மீள அளக்கைப்பணியில் சேர்ந்தார். இவர் சென்னை வான்காணக இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். இதிலிருந்து இவரது வானியல்பணி தொடங்கியது.[3]
இவர் அரசு வானியல் கழகத்தின் சார்பாக, இந்தியத் துணைக்கண்ட முழுவதும் அமைந்த 1868 ஆகத்து 17 ஆம் நாளைய சூரிய ஒளிமறைப்பையும்[4] 1871 திசம்பர் 11 ஆம் நாளில் தென் இந்தியச் சூரிய ஒளிமறைப்பையும், பிறகு 1874 இல் நிகழ்ந்த வெள்ளிக்கோள் கடப்பையும் பதிவு செய்தார். இந்த நோக்கீடுகளின்போது தான் முதன்முதலாக, ஒளிப்படக் கருவிகள் வானியல் நோக்கீட்டுக்கு விரிவாகப் பயன்படுத்தப்பட்டன. இவரது ஒளிப்படவியல் வல்லமை, டெனன்ட் பல ஒளிமறைப்புகளையும் சூரிய ஒளிமுகட்டையும் நோக்கிடுகள் செய்ய பேருதவி புரிந்தது.
இவர் 1876 இல் அரசு மின்ட் கழகத் தலைவராகப் பணியமர்த்தப்பட்டார். இந்தப் பதவிவியில் 1882 இல் தான் பணிவிடை பெறும்வரை இருந்தார். பிறகு, இவர் இலண்டனுக்குத் திரும்பினார். இவர் 1885 இல் அரசு வானியல் கழக மன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1890 முதல் 1891 வரை அதன் தலைவராகவும் விளங்கினார். அப்போது இவர் வால்வெள்ளிகளில் ஆர்வம் கொண்டு பல வால்வெள்ளிகளின் வட்டணைகளின் கணக்கீடுகளைச் செய்துள்ளார்.