ஜேம்ஸ் கார்மன் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜேம்ஸ் பேட்ரிக் கார்மன் 14 சூலை 1958 மெல்பேர்ண், ஆஸ்திரேலியா |
கல்வி | மெல்பேர்ண் பல்கலைக்கழகம் (இளங்கலை, இளங்கலைச் சட்டம்) கொலம்பியா பல்கலைக்கழகம் (முதுகலை வணிக மேலாண்மை) |
பட்டம் | மோர்கன் ஸ்டான்லியின் தலைவர் மற்றும் மற்றும் முதன்மை செயல் அலுவலர் |
வாழ்க்கைத் துணை | பென்னி டெட்மன் |
பிள்ளைகள் | 2 |
ஜேம்ஸ் பேட்ரிக் கோர்மன் (James Patrick Gorman)[1]; பிறப்பு: 14 சூலை 1958) ஓர் ஆத்திரேலிய-அமெரிக்க நிதியாளர் ஆவார். இவர் மோர்கன் ஸ்டான்லியின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார் (2021 நிலவரப்படி).[2]அதற்கு முன்பு அதே நிறுவனத்தில் இணைத் தலைவராகவும், மூலோபாய திட்டமிடல்(Strategic Planning) துறையின் இணைத் தலைமை அதிகாரியாகவும் இருந்தார்.[3][4]
ஜேம்ஸ் பி.கோர்மன் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ணில் பிறந்தார். இவரின் உடன் பிறப்புகள் 9 பேர் ஆவர். இவர் மெல்பேர்ணில் உள்ள சேவியர் கல்லூரியில் கல்வி கற்றார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் இளங்கலைச் சட்டம் பட்டங்களையும் பெற்றார். அங்கு இவர் குடியிருப்பு உறுப்பினராகவும், நியூமன் கல்லூரியின் தலைவராக இருந்தார்.[5]
கோர்மன் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடிமகன் ஆவார். இவர் மன்ஹாட்டனில் வசிக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோர்மன் 2019 இல் $ 27 மில்லியன் சம்பாதித்தார். [6]