ஜொ. வெ. சோமயாஜுலு J. V. Somayajulu | |
---|---|
பிறப்பு | ஜொன்னலகட்டா வெங்கட சோமயாஜுலு 30 சூலை 1920 or அண். 1928 சிறீகாகுளம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 24 April 2004 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | நடிகர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சங்கராபரணம் திரைப்படத்தில் சங்கர சாஸ்திரி, தியாகையா (1981 ) படத்தில் தியாகராஜர்
|
உறவினர்கள் | இரமண மூர்த்தி (சகோதரர்) |
ஜொன்னலகட்டா வெங்கட சோமயாஜுலு (Jonnalagadda Venkata Somayajulu) (ஜூலை 30,1920 அல்லது சுமார் 1928[1] -ஏப்ரல் 24,2004) தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காகவும், ஒரு சில தமிழ், கன்னடம், பாலிவுட் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்காகவும் அறியப்பட்ட ஒரு இந்திய நடிகர் ஆவார்.[2][1][3][4] 1980 ஆம் ஆண்டில் வெளியான சங்கராபரணம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுதைப் பெற்றார். இந்தியத் திரைப்படத்துறையின் நூற்றாண்டு விழாவில், போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியத் திரைப்படங்களில் 25 சிறந்த நடிகர்களில் இவரையும் சேர்த்தது.[5]
ஜொன்னலகட்டா வெங்கட சோமயாஜுலு இன்றைய ஆந்திராவின் சிறீகாகுளம் மாவட்டத்திலுள்ள இலுகலம் அக்ரகாரத்தில் பிறந்தார்.[6] இவரது தந்தை குடிவாடா மற்றும் பிற நகரங்களில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் ஆய்வாளராக பணியாற்றினார். இவர் தனது குழந்தைப் பருவத்தை விஜயநகரத்தில் கழித்தார். அங்கு மேடை நாடகங்களிலும் பங்கேற்றார். ஒரு அரசு அதிகாரியாக இருந்த இவர் மகபூப்நகர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணியாற்றினார்.[6][1]
சோமயாஜுலுவுக்கு நடிகராக நற்பெயரைப் பெயரைப் பெற்ற பிற படங்களில் அல்லரி பிள்ளலு, நெலவங்கா, ரவுடி அல்லுடு, சிப்பிக்குள் முத்து, தியாகையா, சப்தபாடி , விஜேதா, அப்புலா அப்பா ராவ், வம்சா விருக்ஷம் மற்றும் ஜாக் உத்தா இன்ஸான் (இந்தி படம்) ஆகியவை அடங்கும். ஸ்ரீ ராகவேந்திரா என்ற தமிழ் திரைப்படத்தில் இராகவேந்திரர் கதாபாத்திரத்தில் நடித்தார்.[7] கன்யாசுல்கம் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு 13 அத்தியாயங்கள் கொண்ட தொலைக்காட்சி தொடரையும் உருவாக்கினார்.[1]அபய் சரண் என்ற வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவாகவும் நடித்தார்.
மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இவரது வாழ்க்கை ஐந்து தசாப்தங்களாக நீடித்தது. குரஜாதா அப்பாராவின் நாடகமான கன்யாசுல்கம் மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தனது சகோதரரும் நடிகருமான இரமண மூர்த்தியுடன் இணைந்து 45 ஆண்டுகளில் சுமார் 500 முறை அதை மேடையேற்றினார். நாடகத்தில் "ராமப்பந்துலு" என்ற இவரது கதாபாத்திரமானபுகழ்பெற்றது. சோமயாஜுலுவின் வெற்றியின் பின்னணியில் இவரது தாயார் சாரதம்மா இருந்தார். சோமயாஜுலுவுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.[1]
இரட்டை நகரங்களான ஐதராபாத்து மற்றும் சிக்கந்தராபாத் ஆகிய பகுதியில் தெலுங்கு நாடகத்தின் வளர்ச்சிக்காக, சோமயாஜுலு தனது சமகாலத்தவர்களான சட்லா ஸ்ரீராமுலு, கரிமெல்லா ராம மூர்த்தி மற்றும் ரால்லபள்ளி ஆகியோருடன் இணைந்து 'ரசரஞ்சனி' என்ற நாடக நிறுவனத்தை நிறுவினார்.[1] சோமயாஜுலு அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கலாச்சார விவகார இயக்குநரகத்தில் பணியாற்றினார்.
சோமயாஜுலு 2004 ஆம் ஆண்டில் ஐதராபாத்தில் மாரடைப்பால் தனது 76 வயதில் இறந்தார்.[1][8]
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் ( |
---|---|---|
1984 | நீங்கள் கேட்டவை | இசை ஆசிரியர் |
1985 | ஸ்ரீ ராகவேந்திரா | புனித சுதீந்திரா |
யார் | சுவாமிஜி | |
1988 | இது நம்ம ஆளு | ஸ்ரீனிவாச சாஸ்திரி |
1989 | திருப்பு முனை | சத்தியமூர்த்தி |
1990 | பகலில் பௌர்ணமி | துறவி. |
1997 | மன்னவா | ஜோதிடர். |