தேசியம் | கனடா |
---|---|
துறை | அரசியல் பொருளாதாரம் |
கல்விமரபு | பொருளாதாரம் |
தாக்கம் | தோர்டீன் வெப்லன், கார்ல் மார்க்சு, மைக்கேல் காலக்கி, கார்நிலஸ் காஸ்டோரிடிஸ், லீவிஸ் மம்போர்டு |
பங்களிப்புகள் | சக்தியின் மதிப்பு கோட்பாடு, மாறுபட்ட குவியல் |
ஆய்வுக் கட்டுரைகள் |
ஜொனாதன் நிட்சன், கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளியல் துறையின் பேராசிரியர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் சிமோச்சர் பிச்சலருடன் இணைந்து மூலதனம் ஒரு சக்தியாக: அதன் அதிகாரங்களைப் பற்றிய படிப்பு என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். மூலதனத்தின் உள்ள மூலதனம் தன்மை பற்றிய இவர்களின் எழுத்துக்கள் மார்க்சிசம் மற்றும் புதியசெந்நெறிப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கான ஒரு மாற்றுப் பார்வையை வழங்குகிறது. இவரின் கருத்துப்படி மூலதனம் என்பது அதிகாரத்தின் ஒரு அளவுகோள். இவருடைய தத்துவ கோட்பாட்டின் படி ஒரு மாறுபட்ட குவியல் மூலம் ஒரு நிறுவனத்தின் சராசரி இலாபத்தை விட அதிக இலாபத்தை ஈட்ட முடியும்.[1][2]