ஜோ டார்லிங்

ஜோசப் டார்லிங் ( Joe Darling 21 நவம்பர் 1870 - 2 ஜனவரி 1946) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவார், இவர் 1894 மற்றும் 1905 க்கு இடையில் ஒரு மட்டையாளராக 34 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடினார். தலைவராக , இவர் மொத்தம் 21 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தினார். இதில் ஏழு போட்டிகளில் வென்றார், நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தார். 1896, 1899, 1902 மற்றும் 1905 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியுடன் டார்லிங் நான்கு முறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தார்; தலைவராக கடைசி மூன்று சுற்றுப்பயணங்கள் செய்தார். 1902 இல் இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த அணிகளில் ஒன்றாக இவரின் தலைமையிலான அணி பரவலாக அங்கீகரிக்கப்பட்டது.இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1657 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 178 ஓட்டங்களை எடுத்துள்ளார். மூன்று நூறுகள் உட்பட ஆட்டப் பகுதிக்கு சராசரியாக 28.56 ஓட்டங்கள் எடுத்தார். 202 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 10635 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

டார்லிங் 1870 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தெற்கு ஆஸ்திரேலியாவின் க்ளென் ஓஸ்மண்டில் பிறந்தார். ஜான் டார்லிங், தானிய வணிகர் மற்றும் இவரது மனைவி இசபெல்லா, நீ பெர்குசன் ஆகியோரின் ஆறாவது மகன் ஆவார். இவர் பிரின்ஸ் ஆல்பிரட் கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு இவர் துடுப்பாட்டத்தில் ஆர்வம் காட்டினார். கடுமையான போட்டியாளரான செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரிக்கு எதிரான வருடாந்திர போட்டியில் தனது 15 ஆம் வயதில் 252 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[1] இவரது வருங்கால தேர்வுத் துடுப்பாட்ட அணியின் வீரர் கிளெம் ஹில் பின்னர் இந்த சாதனையை முறியடித்து 360 ஓட்டங்கள் எடுத்தார்.[2] சிறிது காலத்திற்குப் பிறகு, 1886 இல் ஆஸ்திரேலிய லெவனில் விளையாடிய பின்னர் ஒருங்கிணைந்த தென் ஆஸ்திரேலிய / விக்டோரியா XV அணியில் இவர் சேர்க்கப்பட்டார். அந்தப் போட்டியில் இவர் 16 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.[3]

புஷ்ஷில் இரண்டு ஆண்டுகள் கழித்த இன்னர் டார்லிங் அடிலெயிட் மற்றும் துடுப்பாட்டத்திற்குத் திரும்பினார். அடிலெய்டில் உள்ள ரண்டில் ஸ்ட்ரீட்டில் ஒரு விளையாட்டு உபகரண கடையைத் திறந்தார். பின்னர் காலனித்துவ துடுப்பாட்டப் போட்டிகளில் தென் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார்.[3] அடிலெய்ட் ஓவலில் நியூ சவுத் வேல்ஸுக்கு எதிராக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 5 மற்றும் இரன்டாவது ஆட்டப் பகுதியில் 32 ஓட்டங்கள் எடுத்ததால், தென் ஆஸ்திரேலியா 237 என்ற கணக்கில் வென்றது .[4] அடுத்த ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடரில்ஆண்ட்ரூ ஸ்டோடார்ட் தலைமையில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்ற டார்லிங் தனது முதல் , முதல் தரத் துடுப்பாட நூறு ஓட்டத்தினை எடுத்தார். அந்தப் போட்டியில் இவர் 115 ஓட்டங்களை எடுத்தார்.[5]

சான்றுகள்

[தொகு]
  1. Darling, D. K. (1981). "Darling, Joseph (1870–1946)". Australian Dictionary of Biography – online edition. Australian National University. பார்க்கப்பட்ட நாள் 27 January 2008.
  2. Daly, John A. (1983). "Hill, Clement (Clem) (1877–1945)". Australian Dictionary of Biography – Online Edition. Australian National University. பார்க்கப்பட்ட நாள் 18 January 2008.
  3. 3.0 3.1 Pollard, pp. 322–325.
  4. "South Australia v New South Wales: Sheffield Shield 1893/94". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 29 January 2008.
  5. "South Australia v AE Stoddart's XI: AE Stoddart's XI in Australia 1894/95". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 29 January 2008.