ஜோ டி குருஸ்
| |
---|---|
பிறப்பு | 1963 நாகர்கோவில், தமிழ்நாடு |
தொழில் | புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர் |
மொழி | தமிழ், மலையாளம் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 2004–இன்று |
வகை | பாரம்பரிய மீனவர்கள், கப்பல் போக்குவரத்து, திரைப்படம் |
கருப்பொருள் | நெய்தல், இலக்கியம், வரலாறு, புதினம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆழிசூழ் உலகு(புதினம்) |
துணைவர் | சசிகலா |
பிள்ளைகள் | அந்தோனி டி குருஸ், ஹேமா டி குருஸ் |
ஜோ டி குருஸ் (Joe D Cruz), பிறப்பு: 17 மே 1963) தமிழ் நெய்தல்குடிகளின் வாழ்வை இலக்கியத்தில் பதிவுசெய்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் பிறந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.[1] தற்போது சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. [சான்று தேவை]
திருநெல்வேலி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார்.[2] இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் விஞ்ஞான பாடம் படித்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர் பட்டமும் பெற்றவர்.
திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் பரத் பாலா இயக்கிய மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் [4]