குறிக்கோளுரை | आत्मदीपो भव (சமசுகிருதம்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Be your own light |
வகை | இளநில, மகளிர் கல்லூரி |
உருவாக்கம் | 1932 |
Academic affiliation | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | மனோதோசு தாசுகுப்தா |
முதல்வர் | சிராபாணி சர்க்கார் |
அமைவிடம் | 92, சியாமபிரசாத் முகர்ஜி சாலை , , , 700 026 , 22°31′31.04″N 88°20′37.69″E / 22.5252889°N 88.3438028°E |
இணையதளம் | jogamayadevicollege.ac.in |
ஜோகமாயா தேவி கல்லூரி (Jogamaya Devi College) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமையான[1] மற்றும் முன்னணி பெண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். இது இதே கட்டிடத்தை அசுதோஷ் கல்லூரி (பகல் நேரக் கல்லூரி) மற்றும் சியாமபிரசாத் கல்லூரி (மாலைக் கல்லூரி) ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது. இக்கல்லூரி சர் அசுதோசு முகர்சியின் மனைவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஆகும். இங்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களுக்கான வகுப்புகள் நடைபெறுகிறது. ஜோகமாயா தேவி கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]