ஜோசுவா ஸ்ரீதர் Joshua Sridhar | |
---|---|
இயற்பெயர் | ஸ்ரீதர் |
பிறப்பு | 9 மார்ச்சு 1974 |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | Synthesizer, மின்னணு கீபோர்ட், Vocal |
இசைத்துறையில் | 2004 முதல் தற்போதுவரை |
ஜோசுவா ஸ்ரீதர் (Joshua Sridhar; பிறப்பு: 1974)[1] என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[2][3] இவர் 2004 திசம்பர் 8 அன்று வெளியான புகழ்பெற்ற படமான காதல் திரைப்படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.[1][4]
ஜோஷ்வா ஸ்ரீதர் சென்னையில் 1974 மார்ச் 9 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் சரவணன் மற்றும் இராஜலட்சுமி ஆகியோர் ஆவர். இவர் சென்னையில் உள்ள பாரதிய வித்யாபவனின் இராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளியில் 1980 முதல் 1990 வரை பயின்றார். மேனிலைக்கல்வி முடித்தது பின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூசிக்கில் பியானோ வாசிக்கவும் மேற்கத்திய இசையின் நுணுக்கங்களையும் கற்றார். பியானோ படிக்கும்போது அங்கு கித்தார் கற்ற பெண்ணோடு காதல் மலர 19 வயதில் திருமணம்; 20 வயதில் முதல் குழந்தை என வாழ்க்கையின் போக்கு மாறியது. திருமணத்துக்குப்பின் 1993 இல் கிருத்துவ மதத்துக்கு மதம் மாறினார். அதுவரை ஸ்ரீதராக இருந்தவர் ஜோஷ்வா ஸ்ரீதராக மாறினார். 2004 ஆண்டு இவர் கிருத்துவ மதத்தில் இருந்து வெளியேறி இந்துவாக வாழ்ந்து வருகிறார்.
இளம்வயதிலேயே பியானோவைக் கற்றுக்கொண்டு இளையராஜாவிடம் வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். இசையைப் படிப்பு முடிந்தபின் இளையராஜாவிடம் சேர முயன்று இயலவில்லை. கிறிஸ்தவராக மாறியதை அடுத்து, காஸ்பெல் இசை ஆல்பங்கள் இசையமைக்கும் வாய்ப்பு தேவாலயம் மூலமாகக் கிடைத்தது. தற்செயலாக இந்தப் பாடல்களைக் கேட்ட திரைப்படப் புல்லாங்குழல் கலைஞர் நவீன் தன்னுடைய ஆல்பங்களுக்குக் கீபோர்ட் வாசிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். தெலுங்குத் திரை இசையமைப்பாளர் கீரவாணி, அடுத்து, இசையமைப்பாளர் மணிசர்மாவின் முதல் படம் தொடங்கித் தொடர்ந்து மூன்றாண்டுகள் அவருடைய படங்களில் கீபோர்டு வாசித்தார். அதை அடுத்து இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு இசையமைத்து வந்த சந்தீப் சவுதாவிடம் கீபோர்ட் கலைஞராகப் பணியாற்றினார். ராம் கோபால் வர்மாவின் ‘ரங்கீலா’, ‘தவுத்’ படங்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்ததால் அவருடைய அறிமுகம் கிடைத்தது. இதன்பிறகு பார்த்தாலே பரவசம்’, ‘லகான்’ ‘காதல் வைரஸ்’, ‘பாய்ஸ்’ எனத் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் ரகுமானின் 15 படங்களில் பல பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கீபோர்ட் வாசித்தார். இதே நேரத்தில் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களோடும் இசையால் இணைந்தார்.பாய்ஸ் படத்தில் ஜோசுவாவின் திறமையைக் கவனித்த இயக்குநர் ஷங்கர் மூலமாக முதல் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்த பாலாஜி சக்திவேலுவின் அறிமுகம் கிடைத்தது. அவர் இயக்கிய காதல் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்து,[5] படம் 2004 திசம்பர் அன்று வெளியானது.
ஆண்டு | மொழி[6] | குறிப்புகள் | |||
---|---|---|---|---|---|
தமிழ் | தெலுங்கு | மலையாளம் | கன்னடம் | ||
2004 | காதல் • | பிரேமிஸ்தி | பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( தமிழ் ) | ||
2005 | அபாயம் | டேஞ்சர் • | |||
2006 | உயிர் • | மனோஹரா | |||
2006 | சென்னை காதல் • | ப்ரேமா | |||
2006 | அரண் | கீர்த்தி சக்ரா • | |||
2006 | கேம் • | ||||
2007 | அரசு • | ||||
2007 | நினைத்து நினைத்துப் பார்த்தேன் • | ப்ரேமா | |||
2007 | கல்லூரி • | கலாசால | |||
2009 | லவ் குரு | பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( கன்னடம் ) | |||
2010 | காண பஜானா | பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( கன்னடம் ) | |||
2010 | ஹுடுகா ஹுடுகி | ||||
2010 | தேவதாஸ் | ||||
2011 | அப்பாவி | ||||
2011 | வெப்பம் •[7] | சிகா | தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் கிடைத்தது - தமிழ்[8] | ||
2011 | வித்தகன் | ||||
2011 | யுவன் | கிராட்டம் • | |||
2012 | ஜீனியஸ் | ||||
2013 | விஜ்டல் | ||||
2013 | கூக்லி | பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது ( கன்னடம் )[9] | |||
2014 | ஹுச்சுடுகரு | ||||
2015 | புலண்விசாரணை 2 | ||||
2015 | வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் | ||||
2016 | "54321" | ||||
2016 | பறந்துசெல்ல வா |
குறிப்புகள்: