ஜோதி சுபாஷ் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பணி | நடிகை |
பிள்ளைகள் | அம்ருதா சுபாஷ் |
ஜோதி சுபாஷ் (Jyoti Subhash) மராத்தித் திரைப்படத்துறை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகத்துறையில் பணியாற்றும் ஓர் இந்திய நடிகையாவார். மராத்தி படங்களான வாலு (2008), காப்ரிச்சா பாஸ் (2009), பாலிவுட் படங்களான பூங்க் (2008), அய்யா (2012) ஆகிய படங்களில் நடித்ததில் இவர் மிகவும் பிரபலமானார்.
ஜோதி சுபாஷ் நாடகத்தின் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் தோன்றினார். இவரது ஆரம்பகால தொலைக்காட்சி படைப்புகளிலேயே இவர் அங்கீகரிக்கப்பட்டார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ருக்மாவதி கி அவேலி (1991), ஜசீரே (1992) ஆகிய நாடகத் தொடர்களில் நடித்தார். இவரது நடிப்பில் கோவிந்த் நிஹலானி இயக்கி, 1991ஆம் ஆண்டு வெளிவந்த ருக்மாவதி கி அவேலி என்ற தொலைக்காட்சிப் படம் எசுப்பானிய நாடகமான தி ஹவுஸ் ஆஃப் பெர்னார்டா ஆல்பா என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது எசுபானிய எழுத்தாளர் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா எழுதியது. ஒரு விதவையான, ருக்மாவதி, தனது ஐந்து திருமணமாகாத மகள்களை ராஜஸ்தானில் தனது [[அவேலியில் வளர்ப்பது குறித்த இந்தப் படம் 16 மிமீட்டரில் படமாக்கப்பட்டு, பின்னர் 35 மிமீ வரை பெரிதாக்கப்பட்டது.[1] சமீபத்தில் 2009ஆம் ஆண்டில், மும்பையின் தேசிய கலை மையத்திற்கான (என்சிபிஏ) சிறப்பு அமர்வில் இந்தப் படம் திரையிடப்பட்டது.[2]
1999 ஆம் ஆண்டில், ரஸ்தே என்ற மராத்தி நாடகத்தை இவர் மொழிபெயர்த்தார். முதலில் கோவிந்த் புருஷோத்தம் தேஷ்பாண்டே எழுதி இந்தி மொழியில் இதே பெயரில் வெளிந்தது. இந்தி நாடகத்தை அர்விந்த் கௌர், சத்யதேவ் துபே ஆகியோர் இயக்கியிருந்தனர்.[3][4] தஹாவி பா, தேவ்ராய், ஆம்ஹி அசு லட்கே, சுப்ரா காஹி போன்ற பல படங்களில் குடும்பத்தில் மூத்த பெண்களின் பல்வேறு துணை வேடங்களில் நடித்திருந்தார்.
2004 ஆம் ஆண்டில், இந்தியப் பிரிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையான ஜிஸ் லாகூர் நெய் தேக்கியா என்ற உருது நாடகத்தில் இவர் தோன்றினார். லாகூரிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஒரு வயதான இந்துப் பெண்ணாக நடித்திருந்தார்.[5]
ஜோதி, சுபாஷ்சந்திர தேம்ப்ரே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, நடிகையான அம்ருதா என்ற ஒஉ மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் பல படங்களிலும் ( ஆஜி, சோகா, காந்தா, மசாலா, நிதல், வாலு, பாதா, கல்லி பாய், விஹிர் ) ஒரு நாடகத்திலும் ( கலோகாச்சியா லெக்கி ) ஒன்றாக நடித்துள்ளனர். இவர் ஆஜி என்ற நாடகத்தில் தனது மகள் அம்ருதாவிற்கு பாட்டியாகவும், 2009 ஆம் ஆண்டு காந்தா திரைப்படத்தில் தனது மகளின் தாயாகவும் நடித்திருந்தார். கவாடேஸ் படத்தில் 60 வயதான பெண்ணாக தனது மகள் நடிக்கும் போது அவருக்கு உதவினார்.[6] இவரது மருமகன் சந்தேஷ் குல்கர்னியும் ஒரு திரைப்பட இயக்குனராவார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)