ஜோய் ஆலுக்காஸ் | |
---|---|
பிறப்பு | ஆலுக்காஸ் வர்க்கீஸ் ஜோய் (பிறப்பு :அக்டோபர் 29,1956) திருச்சூர், கேரளா |
இருப்பிடம் | திரிச்சூர் |
தேசியம் | இந்தியர் |
பணி | ஜோயாலுக்காஸ் நகைக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் |
சொத்து மதிப்பு | $2 பில்லியன் (2020)[1] |
வாழ்க்கைத் துணை | ஜோல்லி ஜோய் |
பிள்ளைகள் | ஜான் பால் ஜோய் ஆலுக்காஸ், மேரி ஆண்டணி, எல்சா ஜோய் ஆலுக்காஸ் |
வலைத்தளம் | |
http://www.joyalukkas.com/about-us/ |
ஜோய் ஆலுக்காஸ் (Joy Alukkas) (பிறப்பு: அக்டோபர் 29, 1956) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்தியத் தொழிலதிபர் ஆவார். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்கிறார்.
இவர் ஜோயாலுக்காஸ் தங்கநகை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார், இந்நிறுவனம் 1987-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, 11 நாடுகளில் 160 கிளைகளைக் கொண்டுள்ளது. நகைத் துறையில் ஒரு முக்கிய அடையாளத்தைப் பெற்ற பிறகு, ஜோயாலுக்காஸ் நிறுவனமானது நில விற்பனை, வாழ்க்கை நளினப் பொருட்கள், மற்றும் பட்டுத்துறைகளிலும் தனது தொழிலை விரிவாக்கியது.
இவரது குடும்பம் தென்னிந்தியாவில் 3 வது பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பமாகவும் கருதப்படுகிறது.
இவரது தந்தை வர்கீசு ஆலுக்காசு என்பவர் கேரள மாநிலத்தின் திருச்சூரின் நெடுஞ்சாலையில் ஒரு சிறிய நகைக்கடையைத் தொடங்கினார். [2] பின்னர், வர்கீசு தனது வணிகத்தை தனது மகன்கள் ஜோஸ், பிரான்சிஸ், ஜோய் மற்றும் ஆண்டோ ஆலுக்காஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
1987 ஆம் ஆண்டில் தனது முதல் நகைக்கடை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, ஜோயாலுக்காஸ் தனது நிறுவனத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார், ஓமான், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.