ஜோஹ்ரா பாய் | |
---|---|
![]() ஜோஹ்ரா பாய் அக்ரேவாலி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1868 |
பிறப்பிடம் | ஆக்ரா, இந்தியா |
இறப்பு | 1913 (45 வயதில்) |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, ஆக்ரா கரானா |
தொழில்(கள்) | இந்துஸ்தானி பாடகர் |
வெளியீட்டு நிறுவனங்கள் | கிராமஃபோன் நிறுவனம்[1] |
ஜோஹ்ராபாய் அக்ரேவாலி (1868-1913), ஜோஹ்ராபாய் என்றும் அழைக்கப்படுகிறார். இவர்1900 களின் முற்பகுதியில் இருந்து ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவர். கௌஹர் ஜானுடன் இணைந்து, இந்திய பாரம்பரிய இசையில், வேசியாகப் [2] பாடும் பாரம்பரியத்தின் முடிவு காலத்தை குறிக்கிறார். அவரது ஆண் தன்மைக் கொண்ட பாடல்களுக்கு பெயர் பெற்ற அவர்,[3] இந்தியாவின் கிராமபோன் நிறுவனத்திற்காக பல பாடல்களைப் பதிவு செய்தார்.
ஜோராபாய் 1868 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் உள்ள ஆக்ராவில் பிறந்தார். ஹிந்துஸ்தானி இசையின் ஆக்ரா கரானாவின் விரிவுரையாளரான அவர், "ஆக்ராவிலிருந்து" என்று மொழிபெயர்க்கும் அக்ரேவாலி என்ற குடும்பப் பெயரைப் பெற்றார்.அவரது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், ஜிஹ்ராபாய் உஸ்தாத் ஷெர்கான், உஸ்தாத் கல்லன் கான் மற்றும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மெஹபூப் கான் ( தாராஸ் பியா ) ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.[4]
ஜோஹ்ராபாய், ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் காயல் போன்ற வடிவங்களில் இருந்து பாடல்களையும், டாக்காவின் அஹ்மத் கானிடம் கற்றுக்கொண்ட தும்ரி மற்றும் கஜல் உள்ளிட்ட இலகுவான வகைகளையும் பாடினார்.
ஜோஹ்ராபாயின் பாடலானது நவீன காலத்தில் ஆக்ரா கரானாவின் மிகப் பிரபலமான பெயரான பயாசு கானை பாதித்தது. மேலும் பாட்டியாலா கரானாவின் உஸ்தாத் படே குலாம் அலி கான் கூட ஜோஹ்ராபாயை உயர்வாகக் கருதினார்.
இந்தியாவின் கிராமபோன் நிறுவனம் , 1908 இல் அவருடன் ஒரு பிரத்யேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 25 பாடல்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,500 வீதம் செலுத்தப்பட்டது. ஜோஹ்ராபாய் 1908-1911 இல், 60 பாடல்களுக்கு மேல் பதிவு செய்தார். 1994 இல், அவரது மிகவும் பிரபலமான 18 பாடல்கள் ஒரு ஒலிநாடாவில் மறு வெளியீடாக வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்கள் அடங்கிய ஒரு சிறிய வட்டு 2003 இல் வெளிப்பட்டது.[5]
ஜோஹ்ராபாயின் 78 ஆர்.பி.எம் பதிவுகளில் இன்று சில சிறிய துண்டுகள் மட்டுமே எஞியுள்ளன;[6] சில குறிப்பிடத்தக்க பாடல்கள், 1909 ஆம் ஆண்டு ஜான்புரி ராகத்தில் "மட்கி மோர் ரீ கோராஸ்" மற்றும் சோஹினி ராகத்தில் தேக்கென் கோ மன் லால்சே ஆகியவை அடங்கும். 78 ஆர்பிஎம் ரெக்கார்டிங்குகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்டவை பேட்ரிக் மௌட்டலின் இணையதளத்தில் பாடல்களாகக் கிடைக்கப்பெற்றன.