டக் கட்டிங் என்பவர் திறந்த மூல மென்பொருளை மிகவும் ஆதரிப்பவர். இவர் பதினைந்து வருடங்களுக்கு மேலாக தகவல் தொழில்நுட்ப துறையில் அனுபவம் கொண்டவர்.அப்பாச்சி ஹடூப் மற்றும் அப்பாச்சி லூசின் உருவாக்கியவர் இவரே.
1988 ஆம் ஆண்டில் தொடங்கி, அவர் தகவல் அணுகலில் புதிய அணுகுமுறைகள் கண்டறிவதில் முனைப்பாக சேராக்ஸ்ன் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையத்தில் (பார்க்) ஐந்து ஆண்டுகள் கழித்தார். இந்த வேலையில் அவர் ஏழு வெளியீடுகள்[1] மற்றும் ஆறு காப்புரிமைகள் பெற்றார். 1993 ஆம் ஆண்டு அவர் ஆப்பிள் நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்ப குழு (ATG)விற்கு சென்றார். 1996 ஏப்ரலில், டக் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு அவர் [1][தொடர்பிழந்த இணைப்பு] நிறுவனத்தில் முக்கிய தேடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.