டப்டெலின் (Tuftelin) என்பது பல் பற்சிப்பியில் காணப்படும் அமில பாஸ்போரிலேட்டட் கிளைகோபுரதம் ஆகும். மனிதர்களில், டப்டலின் புரதம் TUFT1 எனும் மரபணுவின் வெளிப்பாட்டால் உற்பத்தியாகிறது.[1][2] இது அமில புரதமாகும். இது பல் பற்சிப்பி கனிம மயமாக்கலில் பங்கு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இது பற்சொத்தையால் எளிதில் பாதிக்கப்படுகிறது. இது தாழாக்சியம், மீசன்கைமல் தண்டணு செயல் மற்றும் நியூரோடுரோபின் நரம்பு வளர்ச்சி காரணி பங்களிப்பு நரம்பியல் வேறுபாட்டுடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.[3]
இரண்டு வகையான பற்சிப்பி புரதங்கள் உள்ளன: அமெலோஜெனிசு & நானோமெலோஜெனின்சு. டப்டெலின் நானோமெலோஜெனின்சு வகையினைச் சார்ந்தது.[4]
இந்த புரதம் அமெலோஜெனீசிசின் போது குறுகிய காலத்தில் உருவாகிறது. டப்டெலின்களின் செயல்பாடு சர்ச்சையில் உள்ளது. ஆனால் பல் வளர்ச்சியின் போது பற்சிப்பியின் கனிம மயமாக்கல் செயல்முறையைத் தொடங்க இது காரணமாக உள்ளதாக முன்மொழியப்பட்டது.[5][6]
பற்சிப்பியில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்கப் புரதங்கள் அமீலோஜெனின்கள், எனாமெலின்கள், மற்றும் அமீலோபிளாஸ்டின்கள்.
டப்டெலின் (TUFT1)க்கான மனித குறியாக்க மரபணு எருசலம் எபிரேய பல்கலைக்கழகத்தின் ஹடாசா மருத்துவ பள்ளியின் பல் மருத்துவத்துறைப் பேராசிரியர்கள் டேனி டாய்ச் மற்றும் அஹரோன் பால்மன் நகலாக்கம் செய்தனர். [2]
ட்ப்டெலின் TFIP11வுடன் இடைவினைகள் புரிவதாக அறியப்படுகிறது.[7]