டளஸ் அளகப்பெருமா Dullas Alahapperuma | |
---|---|
ඩලස් අලහප්පෙරුම | |
வெகுசன ஊடகத்துறை அமைச்சர் | |
பதவியில் 16 ஆகத்து 2021 – 3 ஏப்ரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | கெஹெலிய ரம்புக்வெல |
பின்னவர் | நாளக்க கொடகேவா |
எரிசக்தி அமைச்சர் | |
பதவியில் 12 ஆகத்து 2020 – 16 ஆகத்து 2021 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | மகிந்த அமரவீர |
பின்னவர் | காமினி லொகுகே |
விளையாட்டுத்துறை அமைச்சர் | |
பதவியில் 22 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
பிரதமர் | மகிந்த ராசபக்ச |
முன்னையவர் | ஹரின் பெர்னாண்டோ |
பின்னவர் | நாமல் ராசபக்ச |
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
பதவியில் 1994–2001 | |
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2005–2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டளசு தகம் குமார அளகப்பெருமா 14 மே 1959 இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி - சிறீலங்கா மக்கள் முன்னனி |
துணைவர் | பிரதீபா தர்மதாசா |
பிள்ளைகள் | மகிமா இந்துவர, கௌசிக்கா நாலந்த |
முன்னாள் கல்லூரி | புனித செர்வேசியசுக் கல்லூரி, ஆனந்தா கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பத்திரிகையாளர் |
டளஸ் அளகப்பெரும (Dullas Alahapperuma; பிறப்பு: 14 மே 1959) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அளகப்பெருமா மாத்தறையில் திக்குவெல்லை என்ற ஊரில் கரோலிசு அளகப்பெருமா, அசுலின் ஆகியோருக்குப் பிறந்தவர். பெற்றோர் இருவரும் பாடசாலைத் தலைமை ஆசிரியர்கள் ஆவர்.[1] ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்ற டளசு, அயோவா பல்கலைக்கழகத்தில் ஒன்றரை ஆண்டுகள் அரசறிவியல் பயின்றார், ஆனால் பட்டம் எதுவும் பெறவில்லை.[2]
1994 ஆம் ஆண்டில் மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை (76,678) பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2000 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சமுர்த்தி, கிராம மேம்பாடு, நாடாளுமன்ற விவகாரங்கள், மலையக அபிவிருத்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2001 தேர்தலில் இவர் வெற்றி பெறவில்லை.
2005 இல் லக்சுமன் கதிர்காமர் கொல்லப்பட்டதை அடுத்து, திசம்பர் 19 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் மூலம் டளசு நாடாளுமன்றம் சென்றார். 2007 இல் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2010 தேர்தலை அடுத்து இவர் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார். இளைஞர் விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அப்பதவியை வகிக்ககவும், அரசுத்தலைவருக்கு அதைக அதிகாரங்களை வழங்கவும் கொண்டுவரப்பட்ட 18-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்தார். 2015 இல் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கும் 19-ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக இவர் வாக்களித்தார்.
2015 தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு 105,406 விருப்பு வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[3] 2020 தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளராக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 103,534 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார். இதன் போது அரசுத்தலைவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கக்கூடிய 20-ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
2022 சூலையில் அரசுத்தலைவர் தேர்தலில் வேட்பாளராகத் தன்னை அறிவித்தார்.[4][5] இவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவளிப்பதாக அறிவித்தார்.
டளசு அளகப்பெரும காலியைச் சேர்ந்த பிரபல பாடகி பிரதீபா தர்மதாசாவைத் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.