தாவ்கின்சியா தாம்பிரபரனியே 'Dawkinsia tambraparniei | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | தாவ்கின்சியா
|
இனம்: | தா. தாம்பிரபரனியே
|
இருசொற் பெயரீடு | |
தாவ்கின்சியா தாம்பிரபரனியே சைலசு, 1954 | |
வேறு பெயர்கள் | |
பண்டியசு அருளியசு தாம்பிரபரனியே சைலசு 1954 |
தாவ்கின்சியா தாம்பிரபரனியே (Dawkinsia tambraparniei) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாமிரபரணி நதிப் படுகையில் மட்டும் காணப்படும் சைப்ரினிட் மீன் வகைகளுள் ஒன்று. இந்த இனம் 12.8 சென்டிமீட்டர்கள் (5.0 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[2] சைலசு என்பார் முதன்முதலில் இதனை புன்டியசு அருளியசு தாம்பிரபரனியே என விவரித்து இருந்தார்.[3] பின்னர் 2013-ல் இந்த சிற்றினம் தாவ்கின்சியா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது.[4] இந்த மீன்களின் எண்ணிக்கை மணல் திருட்டு உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது.[5]