![]() | |
வகை | பொதுப்பரவல் நிறுவனம் (முபச: 532371 ) |
---|---|
நிறுவுகை | 1996 |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முதன்மை நபர்கள் | கிஷோர் அனந்த் சௌகார் (தலைவர்) நரசிம்மன் சிரீநாத் (மேலாண்மை இயக்குநர்) |
தொழில்துறை | தொலைதொடர்புத் துறை |
உற்பத்திகள் | நிலைத்தயிடப் பேசி மற்றும் நகர்பேசி சேவைகள், அகலப்பட்டை இணைய அணுக்கம், எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் பிணையச் சேவைகள் |
வருமானம் | ₹3,191 கோடி (ஐஅ$370 மில்லியன்) (2011)[1] |
தாய் நிறுவனம் | டாட்டா குழுமம் |
பிரிவுகள் | டாட்டா டொகோமோ (சிடிஎம்ஏ/ஜிஎஸ்எம்) வெர்ஜின் மொபைல் (சிடிஎம்ஏ/ஜிஎஸ்எம்) |
இணையத்தளம் | www |
டாட்டா டெலிசர்விசசு லிமிடெட் (Tata Teleservices Limited, TTSL) (முபச: 532371 ) மகாராட்டிர மாநிலத்தின் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு தொலைத்தொடர்பு சேவைகளையும் அகலப்பட்டை இணைய அணுக்கச் சேவைகளையும் வழங்கும் ஓர் இந்திய தொலைதொடர்பு சேவையாளராவர். டாட்டா குழுமத்தின் ஓர் துணை நிறுவனமாக விளங்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டாட்டா டொகோமோ என்ற வணிகப்பெயரில் நகர்பேசி சேவைகளையும் டாட்டா இண்டிகாம் என்ற பெயரில் நிலையிட தொலைபேசிச் சேவைகளையும் சிடிஎம்ஏ நகர்பேசிச் சேவைகளையும் வழங்கி வருகிறது.
நவம்பர் 2008இல் சப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்டிடி டொகோமோ இநிறுவனத்தின் 26 விழுக்காடு பங்குகளைஏறத்தாழ ரூ.13,070 கோடிகளுக்கு ($2.7 பில்லியன்) வாங்கியது.[2]
பெப்ரவரி 2008இல் ஐக்கிய இராச்சியத்தின் வெர்ஜின் குழுமத்துடன் இணைந்து வெர்ஜின் மொபைல் என்ற மெய்நிகர் நகர்பேசிச் சேவைகளை வழங்கி வருகிறது.