டான்ஸ் ஜோடி டான்ஸ் | |
---|---|
![]() | |
வேறு பெயர் | Dance Jodi Dance |
வகை | உண்மைநிலை நடன போட்டி நிகழ்ச்சி |
இயக்கம் | ஆர். கௌசிக் |
வழங்கல் | தீபக் தினகர் (1-3) பேர்லே மானே (3) அஞ்சனா (3) |
நீதிபதிகள் | சினேகா (1-3) சுதா சந்திரன் (1) கௌதமி (1 & 3) பிரியாமணி (2) நமிதா (3) பூஜா (3) பிரியா ராமன் (3) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 125 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சபரேஷ் |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 17 செப்டம்பர் 2016 29 பெப்ரவரி 2020 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0 |
டான்ஸ் ஜோடி டான்ஸ் என்பது 17 நவம்பர் 2016 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும்.[1][2] இதுவரையிலும் மூன்று பருவங்காள ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் பருவங்களை தீபக் தினகர் என்பவர் தொகுத்து வழங்கியுள்ளார். இவருடன் மூன்றாம் பருவத்தை பேர்லே மானே மற்றும் அஞ்சனா அகியோரும் இணைத்து வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி சின்னத்திரை நட்சத்திரங்களுடன் வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருக்கும் போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்து நடனமாடி அவர்களின் நடனத் திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.
பருவங்கள் | அத்தியாயங்கள் | ஒளிபரப்பு | நேரம் | ||
---|---|---|---|---|---|
முதல் ஒளிபரப்பு | இறுதி ஒளிபரப்பு | ||||
1 | 41 | 17 செப்டம்பர் 2016 | 4 பெப்ரவரி 2017 | சனி - ஞாயிறு இரவு 8:30 மணிக்கு | |
2 | 51 | 2 டிசம்பர் 2017 | 27 மே 2018 | சனி - ஞாயிறு இரவு 8:30 மணிக்கு | |
3 | 31 | 16 நவம்பர் 2019 | 29 பெப்ரவரி 2020 | சனி - ஞாயிறு மாலை 6:30 மணிக்கு |
இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 17 செப்டம்பர் 2016 முதல் 4 பெப்ரவரி 2017 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 41 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை தீபக் தினகர் என்பவர் தொகுத்து வழங்க, சினேகா, சுதா சந்திரன் மற்றும் கௌதமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.[3][4][5]
இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி 27 ஜனவரி 2017 அன்று சென்னையில் நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் 5 ஜோடிகள் கலந்து கொண்டனர்.[6][7]
இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இதில் பெரும்பாலும் தொலைக்காட்ச்சி நடிகைகள் போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்து நடனம் ஆடினார்கள்.
# | பிரபலங்கள் | துறை | ஜோடி |
---|---|---|---|
1 | சாய் பிரியங்கா ரூத் | நடிகை, வடிவழகி | அருண் ஜாக்சன் |
2 | ராகவ் | நடிகர், நடனக்கலைஞ்சர் | ரேஷ்மா |
3 | அனுயா பகவத் | நடிகை | நவீன் |
4 | அபிராமி (1-6) சுவேதா (7) |
வடிவழக்கி, நடனக்கலைஞர் | கதிர் |
5 | நந்தினி | நடிகை | யோகேஷ் |
6 | மிஷா கோஷல் | நடிகை | ஜீவன் |
7 | சித்ரா | நடிகை | அறிவழகன் |
8 | சாண்ட்ரா ஆமி | நடிகை | நாஷ் |
9 | சஞ்சனா சிங் | நடிகை | விகாஸ் |
10 | மதன் | நடிகர் | அஸ்வினி |
11 | சித்தார்த் குமார் | நடிகர் | அர்ச்சனா |
12 | யுதன் பாலாஜி | நடிகர் | நான்சி |
இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் 2 திசம்பர் 2017 முதல் 27 மே 2018 ஆம் ஆண்டு வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 51 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[8][9] நடிகைகள் சினேகா, பிரியாமணி மற்றும் கௌதமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். தீபக் தினகர் என்பவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[10] இந்த பருவத்தின் வெற்றியாளர்கள் ரூத் மற்றும் ரினீஷ் ராஜ் ஆவார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் 16 நவம்பர் 2019 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 29 பெப்ரவரி 2020 அன்று கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது. முந்தைய பகுதிகளில் நடுவராக இருந்த நடிகை சினேகா இந்த பகுதியிலும் தொடர்கிறார் இவருடன் நடிகைகள் பிரியா ராமன் மற்றும் பூஜா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். புதுமுக தொகுப்பாளினி பேர்லே மானே என்பவர் தொகுப்பாளர் தீபக் தினகர் இணைந்து இந்த நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[11]