வகை | பொது நிறுவனம் |
---|---|
தலைமையகம் | சாகிபாபாத், காசியாபாத், உத்தரப்பிரதேசம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | நுகர்வோர் பொருள்கள் |
உற்பத்திகள் |
|
வருமானம் | ₹8,989 கோடி (US$1.1 பில்லியன்) (2020)[1] |
இயக்க வருமானம் | ₹1,827 கோடி (US$230 மில்லியன்) (2020)[1] |
நிகர வருமானம் | ₹1,444 கோடி (US$180 மில்லியன்) (2020)[1] |
மொத்தச் சொத்துகள் | ₹9,354 கோடி (US$1.2 பில்லியன்) (2020)[1] |
பணியாளர் | 7,740 (March 2020)[1] |
இணையத்தளம் | www |
[2] |
டாபர் (Dabur) பர்மன் என்பவரால் 1884ல் தொடங்கப்பட்ட இந்திய நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இயற்கை நுகர்வோர் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.[3] இந்நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.[4]
1880களின் நடுப்பகுதில், கொல்கத்தாவில் உள்ள ஆயுர்வேத பயிற்சியாளரான பர்மன்,காலரா, மலச்சிக்கல் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்தார்.அவர் தனது ஆயுர்வேத சூத்திரங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதற்காக 1884 ஆம் ஆண்டில் டாபர் இந்தியா லிமிடெட் என்கின்ற நிறுவனத்தை அமைத்தார்.[5]
டாபர் இந்தியாவின் முழு உரிமையாளரான டாபர் இன்டர்நேசனல், முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்சையின் பங்குகளை வைத்திருந்தது, இது சூன் 2012இல் விற்கப்பட்டது.[6]
முன்னாள் நிர்வாக இயக்குனர் பிரதீப் பர்மன் 27 அக்டோபர் 2014 அன்று பாஜக அரசு கறுப்பு பணம் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியல் வெளியிட்ட போது இவர் அதில் இடம் பிடித்திருந்தார். இந்த கருப்பு பண குற்றச்சாட்டை இவர் நிராகரித்தார்.[7]
டிசமபர் 2020 இல், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை, டாபர் தேன் மற்றும் பிற முக்கிய வர்த்தக குறிகளின் தயாரிப்புகளுடன், சர்க்கரை பாகுடன் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.[8]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)