டாபெடில்ஸ் -வில்லியம் வேர்ட்ஸ்டுவார்த் | |
---|---|
by வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் | |
இக்கவிதையின் ஒரு கையெழுத்துப் பிரதி (1802), பிரித்தானிய நூலகம்.[1] |
டாபெடில்ஸ் (I wandered Lonely as a Cloud or Daffodils)என்பது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதிய கவிதை.[2] வேர்ட்ஸ்வெர்ர்த்தும், அவரது தங்கை டோரோத்தியும் ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் 1802ஆம் ஆண்டு டாபெடில் மலர்கள் பூத்துள்ள படுகையினை கடந்து செல்லும் போது டாபெடில் மலர்களால் ஈர்க்கப்பட்டதால் இந்தக் கவிதை 1804 முதல் 1807ஆம் ஆண்டிற்குள் எழுதப்பட்டது. 1815ஆம் ஆண்டு இதன் மறுபதிப்பு வெளியிடப்பட்டது. 2004ஆம் ஆண்டு இந்தக் கவிதை எழுதிய 200வது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில் 15,000 பிரித்தானிய பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் 4 பகுதிகள் உள்ளன. 24 வரிகனை உள்ளடக்கியுள்ளது. இதில் டாபெடில் மலர்களின் அழுகு, இயற்கையை நேசித்தல், கவிஞரின் டாபெடில் பற்றிய கடந்த கால நினைவுகள் பற்றி அழகுற தரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஏரி மாவட்டத்தில் உல்சுவாட்டர் ஏரியின் கிளென்கோய்ன் விரிகுடாவைச் சுற்றி வேர்ட்ஸ்வொர்த்தும், அவரது தங்கை டோரோத்தியுடன் அவர் ஒரு நடைபயணம் மேற்கொண்டபோது இக்கவிதையை எழுதும் எண்ணம் அவருக்குத் தோன்றியது.[3][4] இங்கிலாந்தின் கிராசுமீர் என்ற இடத்தில் உள்ள ஒரு ஏரியைச் சுற்றி நடந்த பொழுது அதை விளக்கி டோரத்தி ஒரு குறிப்பை எழுதினார். அதை அடிப்படையாகக்கொண்டு 1804ஆம் ஆண்டு வேர்ட்ஸ்வொர்த் இக்கவிதையை எழுதத் தொடங்கினார்.[3]