டாயாபூமி வளாகம் Dayabumi Complex Kompleks Dayabumi KL
| |
---|---|
![]() கோலாலம்பூர் டாயாபூமி வளாகம் | |
![]() | |
மாற்றுப் பெயர்கள் | Dayabumi Tower (Menara Dayabumi) |
பொதுவான தகவல்கள் | |
வகை | வணிக அலுவலகங்கள் |
இடம் | சுல்தான் இசாமுதீன் சாலை, கோலாலம்பூர், மலேசியா |
ஆள்கூற்று | 3°08′42″N 101°41′39″E / 3.1449°N 101.69408°E |
கட்டுமான ஆரம்பம் | 14 பெப்ரவரி 1982 |
நிறைவுற்றது | 1984 |
திறப்பு | 5 மே 1984 |
உரிமையாளர் | கேஎல்சிசி சொத்து நிறுவனம் (KLCC Property Holdings) (பெட்ரோனாஸ்) |
மேலாண்மை | கேஎல்சிசி சொத்து நிறுவனம் |
உயரம் | |
கட்டிடக்கலை | 210 m (690 அடி) |
கூரை | 157 m (515 அடி) |
மேல் தளம் | ---- |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 35 |
தளப்பரப்பு | 150,682 m2 (1,621,930 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | எம்ஏஏ கட்டிடக் கலைஞர்கள் (Arkitek MAA & BEP Architects) |
மேம்பாட்டாளர் | மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (UDA Holdings) பெட்ரோனாஸ் |
மேற்கோள்கள் | |
[1][2] |
டாயாபூமி வளாகம் அல்லது கோலாலம்பூர் டாயாபூமி வளாகம் (மலாய்; Kompleks Dayabumi KL; ஆங்கிலம்: Dayabumi Complex) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகும்.
இந்த வளாகம் பல வணிக வசதிகளைக் கொண்டுள்ளது; மற்றும் கோலாலம்பூர் மாநகரத்தின் தொடக்கக் கால வானளாவிய கட்டிடங்களில் ஒன்றாகும். டாயாபூமி வளாகம் அப்போதைய மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் 1984 மே 5 அன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
இந்த வளாகம் முதலில் 1900-ஆம் ஆண்டுகளில் தொடங்கி 1981-ஆம் ஆண்டு வரையில் மலாயா தொடருந்து நிறுவனத்தின் பட்டறைகள் மற்றும் தொடருந்து தளவாடப் பொருள்களுக்கான கிடங்குகளின் தளமாக இருந்தது. இது 53 எக்டேர் பரப்பளவைக் கொண்ட ஒரு வளாகமாகும். கோலாலம்பூர் நகர்ப்புற புதுப்பித்தல் விரிவாக்கத் திட்டத்தின் (Kuala Lumpur Comprehensive Urban Renewal Rrogramme) ஒரு பகுதியாக நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில், இந்த வளாகத்தைக் கட்டுவதற்கு ரிங்கிட் RM 200 மில்லியன் செலவானது.[3] இந்த வளாகத்தின் கோபுரத் தொகுதி; 60 மாடி உயரத்தில் அமைவதற்கு திட்டமிடப்பட்டது.[3]
இந்த வளாகம் கட்டப்படுவதற்காக, அதைச் சுற்றியுள்ள பல சாலைகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டன.[4] தற்போதைய டாயாபூமி எனும் பெயர் 1979-இல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.[4]
டாயாபூமி வளாகத்தின் கட்டுமானப் பணிகள், பிப்ரவரி 14, 1982 அன்று தொடங்கின. டாயாபூமி வளாகத்தின் கட்டுமானத்தின் போது கிள்ளான் ஆற்றின் கரைக்கு அருகில் இருந்த கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட் (Central Market|) எனும் கோலாலம்ப்பூர் மத்தியச் சந்தை இடிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.
டாயாபூமி வளாகம் பிப்ரவரி 1984-இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வளாகம் [[மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்|மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (UDA) சொந்தமானது.
கோலாலம்பூர் பண்டமாற்றுச் சந்தை (en:Kuala Lumpur Commodity Exchange) சூன் 1984-இல் இந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[5] கோலாலம்பூர் பண்டமாற்றுச் சந்தை என்பது மலேசிய பங்குச் சந்தையின் (Kuala Lumpur Stock Exchange) (KLSE) ஒரு பகுதியாக முன்பு செயல்பட்டது.
அதே 1984-ஆம் ஆண்டில் பெட்ரோனாஸ் நிறுவனமும் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பு பெட்ரோனாஸ் நிறுவனம் கோலாலம்பூர் மாநகர மையத்தில் பல கட்டிடங்களில் செயல்பட்டு வந்தது.[6] அஞ்சல் அலுவலகக் கட்டிடம் அக்டோபர் 30, 1984 அன்று இதே வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது.[7]
கிளானா ஜெயா வழித்தடத்தின் KJ14 KG16 பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்; நடந்து செல்லும் தூரத்தில் டாயாபூமி வளாகம் உள்ளது.