தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டாரென் மைக்கல் பிராவோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகைமிதம்-விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | டுவைன் பிராவோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 287) | நவம்பர் 15 2010 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | திசம்பர் 1 2010 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 146) | சூன் 26 2009 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | பிப்ரவரி 6 2011 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே இ20ப | பெப்ரவரி 28 2010 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 7 2011 |
டாரென் மைக்கல் பிராவோ (Darren Michael Bravo, பிறப்பு: பெப்ரவரி 6, 1989) மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை மட்டையாளர். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மித விரைவு வீச்சு ஆகும்.
திரினிடாட் டொபாகோ அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவ துடுப்பாட்டங்களிலும் விளையாடி வருகிறார். இவர் துடுப்பாடும் பாங்கு இதே அணியின் முன்னாள் வீரர் பிறயன் லாறா போல் இருந்ததாக கருத்துகள் எழுந்தன[1][2][3] இவரின் அண்ணன் டுவைன் பிராவோ இதே அணிக்காக விளையாடி வருகிறார். 2017 ஆம் ஆண்டின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தேர்வானார்.[4] இவர் பிறயன் லாராவின் உறவினர் ஆவார்.[5]
ஜனவரி 2007 இல் டிரினிடாட் மற்றும் டொபாகோ அணிக்காக விளையாடத் துவங்கினார். கயானாவிற்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் ஏழு ஓட்டங்கள் எடுத்தார்.[6] அதற்கு மூன்று நாட்கள் கழித்து முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் லீவர்டு தீவுகளுக்கு எதிரான போட்டியில் எட்டு ஓட்டங்கள் எடுத்தார். பின் விண்ட்வர்ட் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் ஒற்றையிலக்க ஓட்டங்களையே எடுத்தார். நிலையான ஓட்டங்களை எடுக்கத் தவறியதால் 2006-2007 ஆண்டில் வேறு எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை.[7] எனவே மீண்டும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு சென்றார். டிசிஎல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி அதிக ஓட்டங்கள் சேர்த்தோர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். இந்தத் தொடரின் முடிவில் 419 ஓட்டங்கள் சேர்த்தார். இவரின் துடுப்பாட்ட சராசரி 59.85 ஆக இருந்தது.[8]
2008 ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் 2007-2008 ஆம் ஆண்டில் கே எப் சி கோப்பைக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடினார். இந்த் தொடரின் முதல்போட்டியில் 18 ஓட்டங்களில் அணி ஆட்டமிழந்து மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த அணி எனும் மோசமான சாதனை படைத்தது.[9] இந்தப் போட்டியில் பிராவோவை சேர்த்து ஆறு வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர்.[10] இந்தத் தோல்வியைப்பற்றிக் கூறும் போது எட்வர்டு அதிகவேகத்தில் பந்துவீசியதும்,காலின்சின் சிறப்பான ஆட்டமும் எங்களை தோல்வியடையச் செய்தது. அவர்களிடம் இருந்து ஆட்டத்தை மீட்க நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது. ஆயினும் இதிலிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம் . அது அடுத்த போட்டியில் நாங்கள்வெற்றி பெற உதவும் எனத் தெரிவித்தார்.[11] 19 வயதுக்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 165 ஓட்டங்கள் சேர்த்தார். இவரின் சராசரி 55 ஆகும்.[12]நேபாளத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் ஒன்பது ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று (3/9) இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்கள் எடுத்தார்.[13] 2007-2008 ஆண்டுகளில் இரு முதல் தரத் துடுப்பாட்டங்களில் விளையாடினார். ஆனால் முழுமையான திறனை வெளிபடுத்தத் தவறினார். அதிகபட்சமாக 29 ஓட்டங்களையே இவரால் எடுக்க முடிந்தது.