டி.ஏ.வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (D.A.V. Boys Senior Secondary School), என்பது இந்தியாவின் சென்னையின் மையப் பகுதியான கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஒரு மூத்த மேல்நிலைப் பள்ளி ஆகும். இது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் அதன் உயர் முடிவுகளுக்காக இந்த பள்ளி புகழ்பெற்றது. மேலும், பல ஆண்டுகளாக, குறிப்பாக கல்வியாளர்களில், நாட்டின் மிகச் சிறந்த தரவரிசையில் இடம்பிடித்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வு முடிவுகளில் இந்தியாவின் முதல் மூன்று பள்ளிகளில் இடம் பிடித்துள்ளது.[1] [2] அவுட்லுக் மற்றும் எஜுகேஷன் வேர்ல்ட் இதழ்கள் இந்த பள்ளியை தமிழ்நாட்டில் சிறந்ததாக மதிப்பிட்டன. ஸ்ரீ ரவி மல்ஹோத்ரா நிர்வாகக் குழுவின் தற்போதைய தலைவர் ஆவார். 2014 ம் ஆண்டிலிருந்து, கீதா பாலச்சந்தருக்குப் பதிலாக, சாந்தி அசோகன் இப்பள்ளியின் முதல்வராக உள்ளார்.
இந்த பள்ளி லாயிட்ஸ் சாலையில் (அவ்வை சண்முகம் சாலை) அமைந்துள்ளது. இது சகோதரி கல்வி நிறுவனமான, டி.ஏ.வி பெண்கள் பள்ளியால் சூழப்பட்டுள்ளது. ஆண்கள் பள்ளி, மாநகராட்சி விளையாட்டுத் திடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கோபாலபுரம், டி.ஏ.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 6 ஆம் வகுப்பு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது. ஒரு வகுப்பின் சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகும். பத்தாம் வகுப்பு வரை, அறிவியல், சமூக அறிவியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் மொழி ஆகியவை கற்பிக்கப்படும் முக்கிய பாடங்களாக உள்ளது. இரண்டாம் மொழிக்கான தேர்வுகளில் தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவை உள்ளது.
கணினி அறிவியல், மூன்றாம் மொழி, மின் உபகரணங்கள், மரவேலை, மற்றும் கலை போன்ற பிரிவுகள் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன.
ஒவ்வொரு வாரமும் மாணவர்களால் ஹோம சடங்குகள் செய்யப்படுகின்றன.
தாகூர், சிவாஜி, பிரதாப், பாரதி போன்ற பெயர்களில் மாணவர்கள் குழுக்களாக செயல்படுத்தப்படுகின்றனர்.
டி.ஏ.வி. பள்ளி, (தயானந்த் ஆங்கிலோ-வேத பள்ளிகள் அமைப்பு) ஆர்யா சமாஜத்தா ல் [3] "இருளிலிருந்து வெளிச்சத்திற்கு எங்களை இட்டுச் செல்லுங்கள்" என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது. [4] மறைந்த திரு சத்யதேவ், திரு. லாலிந்தர்சேன், திரு மல்ஹோத்ரா டி.சி மற்றும் மறைந்த திரு ஜெய்தேவ் ஆகியோர் பள்ளியின் நிறுவனர் தலைவர்களாக இருந்தனர்.
குலபதி. டாக்டர் எஸ்.பாலகிருஷ்ணா ஜோஷி இப்பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வராக இருந்தார்; ஸ்ரீ ஏ.எஸ்.ராம் கலியா, மறைந்த ஸ்ரீ ஜெய்தேவ் ஜி மற்றும் ஸ்ரீ சுரேந்திர குமார் ஆகியோர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பள்ளியை வழிநடத்தினர். மேலும், டி.ஏ.வி.பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். [5] [6]
இந்தப் பள்ளி சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளிலும், ஏ.ஐ.இ.இ.இ., பி.ஐ.டி.எஸ்.ஏ.டி. மற்றும் இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகளிலும் ஆண்டுதோறும் முதலிடம் பெற்றுள்ளது. ஐ.பீ.ஓ (தங்கம்) மற்றும் ஐ.எம்.ஓ (கௌரவ குறிப்பு) ஆகியவற்றில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய ஏ. தியாகராஜன் (ஜே.இ.இ -2001 ஏ.ஐ.ஆர் 1) மற்றும் பி.என். பார்கவ் ஆகியோர் இப்பள்ளியின் பழைய மாணவர்கள் ஆவர். [2]
கல்வி இதழான எஜுகேசன் வோர்ல்டு, இப்பள்ளிக்கு, கல்வி நற்பெயரில் (டி.பி.எஸ் டெல்லியுடன் சேர்த்து) முதல் இடத்தையும், 2010 ஆம் ஆண்டில் நாட்டில் நான்காவது இடத்தையும் வழங்கியது. இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இது 8 வது இடத்தைப் பிடித்தது. [7]
சமூக சேவையில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக 2004 சுனாமிக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு செய்ய என்.சி.சி [8] மற்றும் ஆண்கள் சாரணர்கள் உதவும் கிராமங்களை பள்ளி ஏற்றுக்கொண்டது.