டி. பி. ராய் சௌத்தரி | |
---|---|
பிறப்பு | பிரித்தானிய இந்தியா, மீர்பூர் மாவட்டம், தேஜாட் | 15 சூன் 1899
இறப்பு | 15 அக்டோபர் 1975 | (அகவை 76)
பணி | ஓவியர் sculptor |
அறியப்படுவது | வெண்கல சிற்பங்கள் உழைப்பாளர் சிலை தியாகிகள் நினைவு சிலை, பாட்னா |
வாழ்க்கைத் துணை | டோலி |
விருதுகள் | பத்ம பூசண் Member of the Order of the British Empire (MBE) லலித் கலா அகாதமி ரத்னா |
தேவி பிரசாத் ராய் சௌத்தரி (Devi Prasad Roy Choudhury) (1899-1975) என்பவர் ஓர் இந்திய சிற்பி, ஓவியர் மற்றும் லலித் கலா அகாதமியின் நிறுவனர் தலைவர் ஆவார். [1] இவர் உழைப்பாளர் சிலை மற்றும் தியாகிகள் நினைவு சிலை உள்ளிட்ட வெண்கல சிற்பங்களுக்காக அறியப்பட்டு, நவீன இந்திய கலைஞர்களில் ஒருவராக பலரால் மதிப்பிடப்படுகிறார். [2] இவர் 1962 இல் லலித் கலா அகாதமிக்கான பெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கியது. [3]
ராய் சவுத்ரி 1899 சூன் 15, அன்று பிரித்தானிய இந்தியாவின் ஒன்றுபட்ட வங்காளத்தின் (தற்போதய வங்கதேசத்தில்) ரங்க்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜாட்டில் பிறந்தார். இவர் தனது கல்வியை வீட்டிலேயே மேற்கொண்டார். [4] புகழ்பெற்ற வங்காள ஓவியரான அபானிந்திரநாத் தாகூரிடமிருந்து ஓவியம் கற்றுக்கொண்டார். இவரது துவக்கக்கால ஓவியங்களில் இவரது ஆசிரியரின் செல்வாக்கைகு புலப்பட்டன. [5] சிற்பக்கலைக்குத் திரும்பிய இவர் துவக்கத்தில் ஹிரோமனி சவுத்ரியிடம் பயிற்சி பெற்றார், பின்னர், மேலதிக பயிற்சிக்காக இத்தாலிக்குச் சென்றார். [1] இந்த காலகட்டத்தில்தான், அவரது படைப்புகள் மேற்கத்திய தாக்கங்களை உள்வாங்கத் தொடங்கின. இந்தியா திரும்பிய அவர் மேலதிக படிப்புகளுக்காக வங்காள கலைப் பள்ளியில் சேர்ந்தார். 1928 ஆம் ஆண்டில், சென்னை சென்று அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவராக இணைந்தார். பின்னர் 1958 இல் ஓய்வு பெறும் வரை இக் கல்லூரியின் துறைத் தலைவர், துணை முதல்வர் துணைவேந்தர் என பல பொறுப்புகளை வகித்து பணியாற்றினார். 1954 இல் லலித் கலா அகாடமி நிறுவப்பட்டபோது, அதன் நிறுவனர் தலைவராக நியமிக்கப்பட்டார். [6] 1955 இல் டோக்கியோவில் நடத்தப்பட்ட யுனெஸ்கோ கலை கருத்தரங்கின் தலைவராக இருந்தார். 1956 ஆம் ஆண்டு நிகில் பாரத் பங்கியா சாகித்ய சம்மிலானியை சென்னையில் அரங்கேற்றினார்.
பிரெஞ்சு சிற்பி அகுஸ்ட் ரெடானின் படைப்புகளால் தாக்கம் பெற்றதாகக் கூறப்படும் ராய் சவுத்ரி, [7] 1993 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் தனது படைப்புகளின் முதல் தனி கண்காட்சியை காட்சிப்படுத்தினார். அதன் பிறகு இந்தியாவில் பல கண்காட்சிகளை வைத்தார். இதில் பிர்லா அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் கல்சர், கொல்கத்தா, ஜஹாங்கிர் ஆர்ட் கேலரி, மும்பை, தேசிய நவீன கலை தொகுப்பு, தில்லி மற்றும் புது தில்லியில் உள்ள லலித் கலா அகாதமி போன்றவை அடங்கும். [1] சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, மகாத்மா காந்தி சிலை போன்ற பெரிய அளவிலான சிலைகளுக்காக இவர் அறியப்படுகிறார். [8] மேலும் பாட்னாவில் உள்ள தியாகிகள் நினைவு சிலை, குளிர்காலத்தில் பசியால் பாதிக்கப்பட்டவர்கள், என இரண்டு வெண்கல சிலைகள், [9] தில்லியில் உள்ள தண்டி யாத்திரை சிலை [10] மற்றும் திருவனந்தபுரத்தில் சித்திரை திருனாள் பலராம வர்மா அவர்களின் கோவில் நுழைவு ஆணை . [2] ஹரேமின் ஒரு கைதி, ராஸ் லீலா, ஒரு பெரிய உடையில் ஒரு மனிதனின் வியத்தகு தோற்றம் மற்றும் தொப்பி மற்றும் தி ட்ரிப்யூன் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவரது படைப்புகள் அரசு அருங்காட்சியகம், சென்னை நவீன கலைக்கூடம், புது தில்லி, அரண்மனை அருங்காட்சியகம், மைசூரில் உள்ள ஸ்ரீசித்ராலயம், சலார் ஜங் அருங்காட்சியகம், ஹைதராபாத் மற்றும் திருவாங்கூர் கலைக்கூடம், கேரளம் போன்ற இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [11] இவரது மாணவர்களான நிரோட் மஜும்தார் மற்றும் பரிடோஷ் சென் போன்ற சிலர் தனித்தன்மை வாய்ந்த கலைஞர்களாக மாறினர் .
1958 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்ம பூசணை வழங்கியது, இது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயர்ந்த விருதாகும். [3] இவர் 1962 இல் லலித் கலா அகாதமியின் பெல்லோஷிப் கௌரவத்தை பெற்றார். மேலும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கொல்கத்தாவின் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், 1968 இல் இவருக்கு டிலிட் (ஹானெரிஸ் காஸா) வழங்கி கௌவித்தது. [4] டோலியை மணந்த சவுத்ரி, [12] 1975அக்டோபர் 15 இல் 76 வயதில் இறந்தார்.