டிக் டிக் டிக் | |
---|---|
இயக்கம் | சக்தி சௌந்தரராஜன் |
தயாரிப்பு | நெமிச்சந்த் ஜாபக் |
கதை | சக்தி சௌந்தர்ராஜன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஜெயம் ரவி நிவேதா பெத்துராஜ் ரமேஷ் திலக் ஆரன் அசீஸ் |
ஒளிப்பதிவு | எஸ். வெங்கடேசு |
படத்தொகுப்பு | பிரதீப் ஈ ராகவ் |
கலையகம் | நெமிச்சந்த் ஜாபக் |
வெளியீடு | சூன் 22, 2018 |
ஓட்டம் | 131 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டிக் டிக் டிக் (Tik Tik Tik) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு இந்தியத் தமிழ் அறிவியல் புனைவுத் திரைப்படம் ஆகும். இதனை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.[1][2] 1963 இல் வெளியான கலை அரசி திரைப்படத்திற்குப் பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விண்வெளித் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆரன் அசீஸ், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[4][5][6] 2016 அக்டோபரில் தயாரிப்பு ஆரம்பமானது. திரைப்பட முன்னோட்டம் 2017 ஆகத்து 15 இல் வெளியானது.[7] 2016 சனவரி 26 இல் வெளியிடவிருந்த இத்திரைப்படம்,[8][9] 2018 சூன் 22 இல் வெளியானது.[10]