டிசிப்ரோசியம்(III) சல்பைடு

டிசிப்ரோசியம்(III) சல்பைடு
Dysprosium(III) sulfide
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருடிசிப்ரோசியம் முச்சல்பைடு, டைடிசிப்ரோசியம் டிரைசல்பைடு
இனங்காட்டிகள்
12133-10-7
ChemSpider 21248508
EC number 235-208-2
InChI
  • InChI=1S/3Dy.3S/q;2*+3;3*-2
    Key: SVCBLQQYIMDMCB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24837760
  • [Dy+3].[Dy+3].[S-2].[S-2].[S-2]
பண்புகள்
Dy2S3
வாய்ப்பாட்டு எடை 421.18 g·mol−1
தோற்றம் பழுப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 6.08 கி/செ.மீ3
சிறிதளவு கரையும்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிசிப்ரோசியம்(III) சல்பைடு (Dysprosium(III) sulfide) என்பது Dy2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். டிசிப்ரோசியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகும்.[1][2][3][4]

தயாரிப்பு

[தொகு]

மந்தவாயுச் சூழல் அல்லது வெற்றிடத்தில் தூய்மையான டிசிப்ரோசியம் மற்றும் கந்தகத்தை சேர்த்து சூடுபடுத்தினால் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்:

2Dy + 3S -> Dy2S3

ஐதரசன் சல்பைடு மற்றும் டிசிப்ரோசியம் ஆக்சைடு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் டிசிப்ரோசியம்(III) சல்பைடு உருவாகும்:

Dy2O3 + 3H2S -> Dy2S3 + 3H2O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

டிசிப்ரோசியம்(III) சல்பைடு மஞ்சள்-ஆரஞ்சு-பழுப்பு நிற படிகங்களை உருவாக்குகிறது: கனசதுர மற்றும் ஒற்றைச்சரிவச்சு அமைப்புகள் உருவாகின்றன.[5]

பழுப்பு-சிவப்பு, கருப்பு அல்லது பச்சை நிறத்தில் படிகங்களை உருவாக்குகிறது என்பதற்கான சான்றுகளும் உள்ளன.

வறண்ட காற்றில் படிகங்கள் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. ஆனால் ஈரப்பதமான காற்றில் அவை மெதுவாக நீராற்பகுப்பு செய்யப்படுகின்றன. இந்த சேர்மம் நீர் மற்றும் அமிலங்களில் மிதமாக கரைகிறது.

வேதிப் பண்புகள்

[தொகு]

டிசிப்ரோசியம்(III) சல்பைடு காற்றில் நன்றாகச் சூடுபடுத்தினால் ஆக்சிசனேற்றம் அடைகிறது:

Dy2S3 + 3O2 → Dy2O2S + 2SO2

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bouroushian, Mirtat (23 April 2010). Electrochemistry of Metal Chalcogenides (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-03967-6. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
  2. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). U.S. Environmental Protection Agency, Office of Toxic Substances. 1980. p. 128. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
  3. "Dysprosium Sulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
  4. "WebElements Periodic Table » Dysprosium » didysprosium trisulphide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
  5. Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.