![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
14456-48-5 நீரிலி ![]() 14890-43-8 அறுநீரேற்று ![]() | |
பண்புகள் | |
தோற்றம் | நிறமற்ற திண்மம் (நீரிலி)[1] வெண் திண்மம் (அறுநீரேற்று)[2] |
அடர்த்தி | 5.8 கி·செ.மீ−3[3] |
உருகுநிலை | 881 °C (1,154 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிசிப்ரோசியம்(III) புரோமைடு (Dysprosium(III) bromide) என்பது DyBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
டிசிப்ரோசியத்துடன் புரோமினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம்(III) புரோமைடு உருவாகிறது.:[4]
டிசிப்ரோசியம் புரோமைடு அறுநீரேற்றை டிசிப்ரோசியம்(III) புரோமைடு கரைசலை படிகமாக்குவதன் மூலம் பெறலாம். இதை அம்மோனியம் புரோமைடுடன் வெற்றிடத்தில் சூடாக்கி நீரிலி வடிவத்தைப் பெறலாம்.[1] டிசிப்ரோசியம் ஆக்சைடு மற்றும் அலுமினியம் புரோமைடு அதிக வெப்பநிலையில் Al2Br6 வடிவத்தில் DyAl3Br12 உடன் வினைபுரிகிறது. இது குறைந்த வெப்பநிலையில் டிசிப்ரோசியம்(III) புரோமைடாக சிதைகிறது:[5]
டிசிப்ரோசியம்(III) புரோமைடு நீரில் கரையக்கூடிய வேதிப்பொருளாகும். வெண்மை கலந்த -சாம்பல் நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக இது காணப்படுகிறது. மேலும், R3(எண். 148) என்ற இடக்குழுவுடன் பிசுமத்(III) அயோடைடு வகை முக்கோண படிகக் கட்டமைப்பை கொண்டுள்ளது.