டிசிப்ரோசியம் தைட்டனேட்டு (Dysprosium titanate) என்பது Dy2Ti2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டனேட்டு குடும்பத்தின் பீங்கான் பொருளான இச்சேர்மம் பைரோ குளோர் என்ற ஆக்சைடு கனிமத்தின் அமைப்புடன் காணப்படுகிறது. இதனுடைய சிஏஎசு எண் 68993-464 ஆகும்.
ஓல்மியம் தைட்டனேட்டு மற்றும் ஓல்மியம் வெள்ளீயமேட்டு சேர்மங்கள் போல டிசிப்ரோசியம் தைட்டனேட்டும் ஒர் அடி நிலை ஆற்றல் பொருளாகும். தாழ் வெப்பநிலை மற்றும் உயர் காந்தப்புலத்தில் போலித்துகள்கள் ஒருமுனைக்காந்தத்தை ஒத்திருப்பதாக 2009 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது[1][2] . டிசிப்ரோசியம் தைட்டனேட்டை அணுக்கரு உலைகளில் பயன்படுத்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)