![]() | |
இருப்பிடம்: | பத்து காவான், பினாங்கு, மலேசியா |
---|---|
அமைவிடம் | 5°14′40″N 100°26′18″E / 5.244576°N 100.438400°E |
திறப்பு நாள் | 23 நவம்பர் 2016 |
உருவாக்குநர் | PE Land (Penang) Sdn. Bhd. |
கடைகள் எண்ணிக்கை | 100 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 37,161 m2 (400,000 sq ft) |
தள எண்ணிக்கை | 1 |
வலைத்தளம் | designvillagepenang |
டிசைன் வில்லேஜ் (மலாய்; ஆங்கிலம்: Design Village) என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள பத்து காவான் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பேரங்காடி ஆகும் [1]
2016-இல் திறக்கப்பட்ட இந்தப் பேரங்காடி, 37,161 சதுர மீட்டர் (400,000 சதுர அடி) பரப்பளவைக் கொண்டது. மலேசியாவின் மிகப்பெரிய விற்பனை நிலையம் என அறியப்படுகிறது. அத்துடன் இந்தப் பேரங்காடி 24 ஏக்கர் வெப்பமண்டல அமைப்பைக் கொண்ட பூங்காவில் தோட்டத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
குத்தகைதாரர்களில் கேப் (Gap), டிம்பர்லேண்ட் (Timberland), பியர் கார்டின் (Pierre Cardin), படினி (Padini), அடிடாஸ் (Adidas), பாடி குளோவ் (Body Glove), லெவிஸ் (Levi's), கெஸ் (Guess), சாம்சோனைட் (Samsonite), எஸ்பிரிட் (Esprit) மற்றும் காட்டன் ஆன் (Cotton On) ஆகியவை அடங்கும்.[2]
பேரங்காடிக்குள் காபி பீன் (Coffee Bean), ஸ்டார்பக்ஸ் (Starbucks), பாஸ்கின்-ராபின்ஸ் (Baskin-Robbins) மற்றும் வெண்டிஸ் (Wendy's) போன்ற உணவகங்களும் உள்ளன. வாட்சன்ஸ் (Watsons) மற்றும் 7-லெவன் (7-Eleven) போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தங்களின் வணிக மையங்களைக் கொண்டுள்ளன.