டிமிபெரோன் (Timiperone), டோலோபெலோன் எனும் வணிகப் பெயரில் விற்கப்படும் பியூட்ட்ரோபீனோன் வகை மனவிறுக்கத் தணிப்பு மருந்தாகும். இது யப்பானில் முதிர் இருமுனை (சீசுனொபிரேனியா) நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.[1][2][3][4]
இது பென்பெரிடால் எனும் சேர்மத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது யூரியா அலகு அமைப்பிற்கு மாற்றாக கந்தக யூரியா அலகு அமைப்பினைக் கொண்டுள்ளது. இது ஏற்பித் தணிபொருளாக, D2|D2 எனும் டோப்பமைன் ஏற்பி மீதும் 5-HT2A எனும் ஏற்பிகள் மீதும் செயல்படுகிறது.[4]