டியர் ஃபிரண்ட் இட்லர் | |
---|---|
இயக்கம் | ராகேஷ் ரஞ்சன் குமார்[1] |
தயாரிப்பு | டாக்டர் அனில் குமார் சர்மா |
திரைக்கதை | ராகேஷ் ரஞ்சன் குமார் |
இசை | அரவிந்த் லியோன் பின்னணி இசை: சஞ்சய் சவுத்ரி |
நடிப்பு | நலிந்த் சிங், ரகுபிர் யாதவ் நேஹா துபியா அமன் வர்மா]][1] |
ஒளிப்பதிவு | ஃபுவத் கான் |
படத்தொகுப்பு | ஸ்ரீ நாராயண் சிங் |
விநியோகம் | அமராபலி மீடியா விஷன் பிரைவேட். லிமிடெட் |
வெளியீடு | 29 சூலை 2011[2] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
டியர் ஃபிரண்ட் இட்லர் (Dear Friend Hitler (Hindi: प्रिय मित्र हिटलर), இந்தியாவில் காந்தி டூ இட்லர் என்ற பெயரில் வெளியன திரைப்படமானது, ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு பன்மொழித் திரைப்படமாகும். இப்படத்தில், ரோகிபிர் யாதவ் அடோல்ப் ஹிட்லராகவும் நேஹா துபியா இவா பிரானாக நடித்துள்ளார். ராகேஷ் ரஞ்சன் குமார் இயக்கியுள்ள இப்படத்தை, அனில் குமார்சர்மாரின் அமர்ராளி மீடியா விசன் தயாரித்துள்ளது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இது எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.[3][4] இத்திரைப்படம் குறித்து பிசினஸ் ஆசியாவானது "ஆத்திரமூட்டும் பெயரைக் கொண்டிருந்தபோதிலும், இந்த படம் கொலைகார பியூரருக்கு புகழுரை அல்ல" எனக் குறிப்பிட்டது.[5] இது இந்தியாவில் 2011 சூலை 29 அன்று வெளியானது.
இப்படமானது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடப்பதாக உள்ளது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் (அவிஜித் தத்) அட்ல்ஃப் இட்லருக்கு (ரகுபிர் யாதவ்) எழுதப்பட்ட கடிதங்களை அடிப்படையாக கொண்டும், இட்லரின் நீண்ட கால காதலியான ஈவா பிரவுன் (நேஹா துபியா) உடனான இட்லரின் உறவைச் சுற்றியும், அவர்கள் இறப்பதற்கு முன்னதாக பியூரர் பதுங்கு அறையில் திருமணம் செய்துகொண்டதைப் பற்றியதாகவும் உள்ளது. இதில் காந்தி மற்றும் இட்லரின் கருத்தியல்களுக்கு இடையிலான வித்தியாசம் குறித்தும், நாசிசத்தைவிட காந்தியத்தின் மேன்மை குறித்தும் சித்தரித்து கூறப்பட்டுள்ளது.
இட்லர் பாத்திரத்தில் நடிக்க முதலில் அனுபம் கெர் ஒப்புக்கொண்டார், ஆனால் பல இலட்சக் கணக்கான யூதர்களை பெரும் இன அழிப்பு செய்த இட்லர் பாத்திரத்தில் நடிப்பதற்காக, இந்தியாவில் உள்ள யூத அமைப்புக்களால் அவருக்கு எழுந்த கண்டனங்களையடுத்து அவர் பின்வாங்கினார்.[6][7]
இப்படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியர் அல்லாத அனைத்துப் பாத்திரங்களிலும் நடிக்க இந்திய நடிகர்களையே பயன்படுத்தியுள்ளதாக இப்படத்தை என்டிடிவி விமர்சித்தது.[8] கோயோமி படத்துக்கு 0.5 / 5 மதிப்பெண் வழங்கியது; இட்லராக நடித்த யாதவின் நடிப்பை பாராட்டிய போதிலும், படத்தின் திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்பம், ஒலிப்பதிவு மற்றும் பிற நடிகர்களின் நடிப்பு போன்றவற்றை விமர்சித்தது.[9]