![]() | |
---|---|
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
2,2,2-டிரைபுரோமோயெத்தனால் | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | அவெர்டின் |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 75-80-9 |
ATC குறியீடு | ? |
பப்கெம் | CID 6400 |
ChemSpider | 6160 |
ஒத்தசொல்s | டிரைபுரோமோயெத்தில் ஆல்ககால் |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C2 |
| |
இயற்பியல் தரவு | |
உருகு நிலை | 73-79 °C (-37 °F) [1] |
கொதி நிலை | 92-93 °C (-43 °F) at 10 மி.மீ.பாதரசம்[1] |
டிரைபுரோமோயெத்தனால் (Tribromoethanol) என்பது C2H3Br3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மயக்க மருந்தாகும். விலங்குகளை குறிப்பாக கொறிணிகளை அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக மயங்கச் செய்ய இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [2]. மூவிணைய அமைல் ஆல்ககாலில் ஒரு கரைசலாக சேர்க்கப்பட்டு அவெர்ட்டின் என்ற வணிகப்பெயரில் இது சந்தைப்படுத்தப்படுகிறது [3]. விரைவாகவும் ஆழ்ந்த மயக்கத்திற்கு அழைத்துச் செல்லவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அதே வேகத்தில் முழுமையாக மயக்கம் தெளியவும் டிரைபுரோமோயெத்தனால் பயனாகிறது [4].
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் டிரைபுரோமோயெத்தனால் பரவலாக மனிதர்களுக்கும் பொதுவாக ஒரு மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது[5] . காமா-அமினோபியூட்டைரிக் அமிலத்தையும், கிளைசீன் ஏற்பிகளையும் தடுக்கும் நேர்மறை மாற்றுத்தூண்டி பண்பேற்றியாக டிரைபுரோமோயெத்தனால் செயல்படுவதாக மின் உடலியங்கியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்புடைய 2,2,2-டிரைகுளோரோயெத்தனால் வழிமுறையைப் போன்ற ஒரு திட்டத்தை இங்கும் காணமுடிகிறது[6]. புரோமல் ஐதரேட்டு எனப்படும் 2,2,2-டிரைபுரோமோயெத்தனால்-1,1-டையால் என்ற சேர்மமும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகளுக்கான பொது மயக்கமருந்தாக கருதப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தினால் டிரைபுரோமோயெத்தனாலாக மாற்றப்பட்டு செயல்படுகிறது [7].