டுங்குன் (P039) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Dungun (P039) Federal Constituency in Terengganu | |
டுங்குன் மக்களவைத் தொகுதி (P039 Dungun) | |
மாவட்டம் | டுங்குன் மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 116,634 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | டுங்குன் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா டுங்குன், புக்கிட் பீசி, டுங்குன் மாவட்டம் |
பரப்பளவு | 58.1 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | வான் அசன் முகமது ரம்லி (Wan Hassan Mohd Ramli) |
மக்கள் தொகை | 156,225 (2020)[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
டுங்குன் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Dungun; ஆங்கிலம்: Dungun Federal Constituency; சீனம்: 龍運國會議席) என்பது மலேசியா, திராங்கானு, டுங்குன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P039) ஆகும்.[8]
டுங்குன் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து டுங்குன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
டுங்குன் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். அவற்றில் தென்சீனக் கடலை ஒட்டிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா டுங்குன் (Kuala Dungun). 1940-ஆம் ஆண்டுகளில் டுங்குன் ஓர் இரும்புச் சுரங்க நகரமாக இருந்தது. மேற்கில் அமைந்துள்ள புக்கிட் பீசி (Bukit Besi) என்ற சிறிய நகரத்தில் இரும்புத் தாது எடுக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் டுங்குன் நகரம் ஒரு துறைமுகம நகரமாகச் செயல்பட்டது. அங்கு இருந்து இரும்புத் தாதுப் பொருள்கள் கப்பல்களுக்கு மாற்றப்பட்டன.
சுரங்கத் தொழிலுக்கு பெயர் பெற்ற டுங்குன் மற்றும் புக்கிட் பீசி நகரங்கள், தொடருந்து பாதையால் இணைக்கப்பட்டு இருந்தன. அந்தத் தொடருந்து பாதை உள்நாட்டு கிராம மக்களுக்கும், வணிகச் செயல்பாடுகளுக்கும் பொது போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தது.
1980-ஆம் ஆண்டுகளுடன் டுங்குன் நகரின் பொற்காலம் முடிந்தது. அங்கு இருந்த சுரங்கங்கள் படிப்படியாக மூடப்பட்டன. அதன் விளைவாக அங்கு செயல்பட்டு வந்த சுரங்க நிறுவனம் அப்பகுதியை விட்டு வெளியேறியது; தொடருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. புக்கிட் பீசி இப்போது அரசாங்க நிதியுதவி பெற்ற செம்பனைத் தோட்டங்களுடன் செயல்படுகிறது.
டுங்குன் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் டுங்குன் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P028 | 1959–1963 | கத்திஜா சிடேக் (Khadijah Sidek) |
மலேசிய இசுலாமிய கட்சி |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P028 | 1963–1964 | கத்திஜா சிடேக் (Khadijah Sidek) |
மலேசிய இசுலாமிய கட்சி |
2-ஆவது மக்களவை | 1964–1969 | சுலைமான் அலி (Suleiman Ali) |
மலேசிய கூட்டணி (அம்னோ) | |
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10][11] | |||
3-ஆவது மக்களவை | P028 | 1971–1973 | அப்துல் வகாப் யூனுசு (Abdul Wahab Yunus) |
மலேசிய இசுலாமிய கட்சி |
1973–1974 | பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
4-ஆவது மக்களவை | P033 | 1974–1978 | பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | அவாங் அப்துல் ஜபார் (Awang Abdul Jabar) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P036 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P039 | 1995–1999 | மொக்தாருதீன் வான் யூசோப் (Mokhtaruddin Wan Yusof) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | முசுதபா அலி (Mustafa Ali) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | ரோசிலி மாட் அசன் (Rosli Mat Hassan) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | மட்டுலிடி ஜூசோ (Matulidi Jusoh) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | வான் அசன் முகமது ரம்லி (Wan Hassan Mohd Ramli) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2020 | கெராக்கான் செஜத்திரா (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | வான் அசன் முகமது ரம்லி (Wan Hassan Mohd Ramli) |
59,720 | 65.43% | + 11.26% | |
பாரிசான் நேசனல் | நோரிசாம் ஜொகாரி (Norhisham Johari) |
25,615 | 28.07% | - 8.70% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | மொகாசிஜோன் ஜொகாரி (Mohasdjone @ Mohd Johari Mohamad) |
5,307 | 5.81% | - 3.25% ▼ | |
தாயக இயக்கம் | நூர் ஆயிசா அசன் (Nur Aishah Hasan) |
322 | 0.35% | + 0.35% | |
சுயேச்சை | கசாலி இசுமாயில் (Ghazali Ismail) |
305 | 0.33% | + 0.33% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 91,269 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 736 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 123 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 92,128 | 78.98% | - 5.77% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 115,559 | ||||
பெரும்பான்மை (Majority) | 34,105 | 37.36% | + 19.96% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12] |