டுஸ்க்-இ-ஜகாங்கீரி

ஜஹாங்கீர் நாமா புத்தகத்திலுல்ள ஓர் ஓவியத்தில் அரண்மனையில் ஜஹாங்கீருடன் அப்துல் ஹசன் மற்றும் மனோகர்.

டுஸ்க்-இ-ஜகாங்கீரி (Tuzuk-e-Jahangiri அல்லது Tuzuk-i-Jahangiri; பாரசீக மொழி: تزک جهانگیری ‎) என்பது முகலாய மன்னர் ஜஹாங்கீரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமாகும். இப்புத்தகம் ஜஹாங்கீர் நாமா என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்புத்தகம் பாரசீக மொழியில் எழுதப்பட்டது. இவரது குல முன்னோரான பாபர் தனது வாழ்க்கை வரலாற்றை பாபர் நாமா என்று எழுதி இப்பழக்கத்தைத் தொடங்கியதின் தொடர்ச்சியாய் இவர் இப்புத்தகத்தை இழுதியுள்ளார். இதில் தனது மதத்தின் வரலாறு, தனது குடும்பம், தனது கலை மற்றும் அரசியல் செயல்பாடுகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பார்க்கவும்

[தொகு]