டேக் ஆஃப் | |
---|---|
இயக்கம் | மகேஷ் நாராயண் |
தயாரிப்பு | அண்டோ ஜோசப் ஷெபின் போக்கர் மேகா ராஜேஷ் |
கதை | மகேஷ் நாராயண் பி. வி. ஷாஜி குமார் |
இசை | ஷான் ரகுமான் கோபி சுந்தர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சாமு ஜோன் வர்கீஸ் |
படத்தொகுப்பு | மகேஷ் நாராயண் பி.வி. சஜிகுமார் |
கலையகம் | ராஜேஷ் பிள்ளை பிலிம்ஸ் |
விநியோகம் | அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி |
வெளியீடு | 24 மார்ச்சு 2017(India) |
ஓட்டம் | 2 மணி 19 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
டேக் ஆஃப் (Take Off) என்பது 2017 ஆண்டு வெளியான மலையாள உயிர் போராட்டத் திரைப்படமாகும். ஈராக்கில் 2014 இல் நடந்த உள்நாட்டுப் போரில் கிர்குக் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றினர். இந்த நகரிலுள்ள அரசு மருத்துவமனைப் பணிக்காக சென்ற இந்தியச் செவியர்களை அவர்கள் சிறைப்பிடித்தனர் இதில் பெரும்பான்மை செவிலியர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இதை பின்னனியாக கொண்ட படம் இது.[1][2] இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயண் ஆவார்,[3] இப்படத்தில் பார்வதி மற்றும் குஞ்சாக் போவன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்திரங்களில் நடித்தனர்.[4] டேக் ஆஃபை மகேஷ் நாராயண் மற்றும் பி.வி.சஜிகுமார் ஆகியோர் எழுத்தில், அண்டோ ஜோசப், ஷெபின் போக்கர், மேகா ராஜேஷ் ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்தது. இந்தப் படத்தின் பல பகுதிகள் துபாய்[5] மற்றும் கேரளத்தில் படமாக்கப்பட்டன. இப்படம் 2017 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள் வெளியானது. படத்தில் நடித்த திவாகர், பார்வதி ஆகியோரின் நடிப்பு குறித்து பாராட்டும் விதத்தில் நேர்மறையான விமர்சனங்கள் வந்தன.[6]
இந்தப் படம் சமீரா என்னும் இஸ்லாமியப் பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டுள்ளது. சமீரா (பார்வதி), கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். போர்ச் சூழல் கொண்ட ஈராக்குக்கு வேலைக்காக போகத் தீர்மானிக்கிறாள். கிர்குக் நகரத்தில் வந்திறங்கும் அவளது தோளில் குடும்பக் கடன், வயிற்றில் புதிய காதலின் பரிசு, நெஞ்சில் மகன் மீதான அன்பு ஆகியவற்றைக் கொண்டவளாக இருக்கின்றாள். இந்த சமீராவின் கதைதான் படத்தின் முதல் பாதியாக உள்ளது.
தனியொருத்தியின் பிரச்சினையாகத் தொடங்கிய இந்தப் படம் இரண்டாம் பாதியில் சமூகப் பிரச்சினையாக உரு கொள்கிறது. காய்ச்சல், தலைவலி, பிரசவம் போன்ற பிரச்சினைகள் கொண்ட எளிய நோயாளிகளை எதிர்கொண்டு பழக்கப்பட்ட செவிலியர்கள், போரால் கை, கால்கள் இழந்து மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. குடும்பக் கஷ்டங்களுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு கடமையாற்றுகிறார்கள் செவிலியர்கள். இந்நிலையில் ஈராக்கில் நடந்த உள்நாட்டுப் போரில் கிர்குக் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றுகின்றனர. அவர்கள் சமீரா உள்ளிட்ட இந்தியச் செவியர்களையும் சிறைப்பிடிக்கின்றனர். இவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பிறகு ஒரு த்ரில்லர் படத்துக்கான தன்மையும் படத்துக்கு வருகிறது.
இந்த செவிலியர்களை மீட்கும் குழுவில் முக்கியப் பங்காற்றிய இந்திய வெளியறவுத் துறை அதிகாரியாக ஃபகத் பாசில் நடித்திருக்கிறார். மீட்புக்குப் பின்னால் இயங்கிய ‘மலையாளி’ என்ற இன உணர்வையும் படம் சொல்லிச் செல்கிறது. இறுதியில் செவிலியர்கள் பலரின் முயற்சியால் மீட்கப்படுகின்றனர் சமானியர்களின் வாழ்க்கையும் அதில் போர் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பும்தான் படம் கண்டடைந்திருக்கும் முடிவுகள்.
திரைப்படம் இடைவேளைக்குப் பிறகான இரண்டாவது பாதியில் திரில்லர் திரைப்படமாக மாறுகிறத. இப்படத்தை நடிகர் கமல் ஹாசன் உட்பட திரைப்படத்துறையினர் புகழ்ந்தனர்.[7]
இது மலையாளத் திரைப்படம் தொடர்புடைய கட்டுரை ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |