டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜி
பிறப்புடி. சி. பாலாஜி
(1975-12-02)2 திசம்பர் 1975
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
இறப்பு29 மார்ச்சு 2024(2024-03-29) (அகவை 48)
கொட்டிவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–2024
உறவினர்கள்சித்தலிங்கையா (மாமா)
முரளி
அதர்வா (மருமகன்)
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

டேனியல் பாலாஜி (Daniel Balaji) எனப்படும் டி. சி. பாலாஜி (2 திசம்பர் 1975 – 29 மார்ச் 2024), இவரது மேடைப் பெயரான டேனியல் பாலாஜி என்பதன் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு தென்னிந்திய நடிகர் ஆவார். இவர் முக்கியமாகத் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றினார்.

இளமை

[தொகு]

பாலாஜி தெலுங்குத் தந்தைக்கும் தமிழ்த் தாய்க்கும் மகனாக சென்னையில் பிறந்தார்.[1] சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் திரைப்படத் தயாரிப்பு படிப்பினைப் படித்தார். இவரது மாமா கன்னடத் திரைப்பட இயக்குநர் சித்தலிங்கய்யா; தமிழ் நடிகர் முரளியின் தந்தை.[2] இவரது மருமகன் அதர்வா, பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானவர்.

இறப்பு

[தொகு]

டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக தனது 48 வயதில் காலமானார்.[3]

திரை வரலாறு

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2003 ஏப்ரல் மாதத்தில் தமிழ்
காதல் கொண்டேன் காவல் அதிகாரி தமிழ்
காக்க காக்க சிறீகாந்த் தமிழ்
2004 பிளாக் ஏழுமலை மலையாளம்
2005 கணேசா சிறீகாந்த் தெலுங்கு
2006 நவம்பர் ரைன் மட்டன்சேரி தாதா மலையாளம்
வேட்டையாடு விளையாடு அமுதன் சுகுமாரன் தமிழ்
2007 பொல்லாதவன் ரவி தமிழ்
சிறுத்தை பீக்கு தெலுங்கு
2009 முத்திரை அழகு தமிழ்
பகவான் சைபுதீன் மலையாளம்
டாடி கூல் சிவா மலையாளம்
2011 கிராதகா சீனா கன்னடம்
மிதிவெடி அசோகா தமிழ்
கிரைம் ஸ்டோரி மலையாளம்
2012 12 ஹவர்ஸ் ஆண்டனி ராஜ் மலாய்
மறுமுகம் மாயழகன் தமிழ்
2013 \பைசா பைசா மலையாளம்
2014 ஞான கிறுக்கன் தமிழ்
டவ் கன்னடம்
சிவாஜிநகரா கன்னடம்
வை ரா வை தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Villain Daniel Balaji First Telugu Interview | Actor Daniel Balaji about Actor Murali and Atharvaa". YouTube.
  2. "Daniel Balaji to essay the character of a Don!". Sify. 2013-09-10. Archived from the original on 2013-09-13. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
  3. "Tamil actor Daniel Balaji passes away due to heart attack" (in en). The New Indian Express. 29 March 2024. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Mar/29/tamil-actor-daniel-balaji-passes-away-due-to-heart-attack. 

வெளி இணைப்புகள்

[தொகு]