அலன்யா, 2010 இல் நடந்த பிரீமியம் ஐரோப்பிய கோப்பை டிரையத்லானில் டேனீலா சிமெட் சோதனை செய்கிறார் | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இத்தாலியர் |
பிறப்பு | 4 ஆகத்து 1989 திரைசுடே, இத்தாலி |
விளையாட்டு | |
விளையாட்டு | நெடுமுப்போட்டி |
கழகம் | பியாமி ஓரா[1] |
டேனீலா செமெட் (Daniela Chmet) (பிறப்பு: 1979 ஆகத்து 14) இவர் ஓர் இத்தாலிய தொழில்முறை முத்தரப்பு, 2007 தேசிய விரைவோட்ட வீரராவார். மேலும், இவர் 2002, 2003, 2004, 2005 மற்றும் 2009 ஆண்டுகளின் பயாத்தல் போட்டிகளில் உலக வெற்றியாளர் ஆவார்.
2004 முதல் 2010 வரையிலான ஏழு ஆண்டுகளில், 32 ஐடியூ போட்டிகளில் பங்கேற்று ஆறு முதல் பத்து இடங்களைப் பெற்றார். 2006 ஆம் ஆண்டில், கான்கனில் நடந்த அணி உலகப் போட்டிகளில் நாடியா கோர்டாசா மற்றும் பீட்ரைசு லான்சா ஆகியோருடன் வென்றார். [2] 2008 ஆம் ஆண்டில், பெய்ஜிங் ஒலிம்பிக்கில், இடுப்பு எலும்பு முறிவு காரணமாக பின்வாங்க வேண்டிய நாடியா கோர்டாசாவிற்கு மாற்றாக இவர் பங்கேற்றார். ஆனால் இவரால் பந்தயத்தை முடிக்க முடியவில்லை. [3]
இவர் காவலர் விளையாட்டுக் கழகமான ஜி.எஸ். பியாம் ஓரோவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4]
2004 முதல் 2010 வரையிலான ஏழு ஆண்டுகளில் 33 ஐடியூ போட்டிகளில் பங்கேற்று 6 முதல் பத்து இடங்களை அடைந்தார். [5]