பிறப்பு | Cleveland, Ohio, U.S. | திசம்பர் 31, 1925
---|---|
இறப்பு | ஆகத்து 16, 2019 Belmont, Massachusetts, U.S. | (அகவை 93)
தேசியம் | American |
துறை ஆலோசகர் | Donald H. Menzel |
அறியப்பட்டது | Cold Big Bang |
டேவிடு இரேமாண்டு இலாய்சர்(David Raymond Layzer) (திசம்பர் 31,1925 - ஆகஸ்ட் 16,2019) ஒரு அமெரிக்க வானியற்பியலாளரும் ஆர்ர்வர்டு பல்கலைக்கழகத்தில் டொனால்ட் எச். மென்செல் வானியல் பேராசிரியரும் ஆவார்.[1][2] வெப்ப இயங்கியலின் இரண்டாவது விதி இருந்தபோதிலும் புடவியின் வரிசையும் தகவல்களும் அதிகரித்து வருவதாக முன்வைக்கும் அண்ட விரிவாக்கம் குறித்த அவரது அண்டவியல் கோட்பாட்டிற்காக இவர் அறியப்படுகிறார்.[3] குளிர் பெரு வெடிப்புக் கோட்பாட்டை ஆதரித்த மிகவும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்களில் ஒருவராகவும் இவர் அறியப்படுகிறார்.[4][5] 1966 ஆம் ஆண்டில் இவர் இந்தக் கோட்பாட்டை முன்வைத்தபோது , புவியில் இரவு வானம் உண்மையில் இருப்பதை விட பொலிவாக இருக்க வேண்டும் என்று கூறும் ஓல்பர்சு முரண்பாட்டை இது தீர்க்கும் என்று இவர் பரிந்துரைத்தார். இரிச்சர்டு எர்ன்சுட்டைன், ஆர்தர் ஜென்சன் போன்ற மனித நுண்ணறிவு பற்றிய மரபுக் கருத்துக்களை விமர்சிக்கும் பல கட்டுரைகளையும் இவர் வெளியிட்டார்.[6] 1963 முதல் அமெரிக்கக் கலை அறிவியல் கல்விக்கழக, உறுப்பினராக இருந்த அவர் , பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் பி மற்றும் ஜே பிரிவுகளில் உறுப்பினராகவும் இருந்தார்.[7][8] அவர் 2019 இல் தனது 93 வயதில் பெல்மாந்தில் காலமானார்.[9]