டேவிட் எட்வின் பிங்கிரி | |
---|---|
பிறப்பு | நியூ ஹெவன், கனெடிகட், | சனவரி 2, 1933
இறப்பு | நவம்பர் 11, 2005 பிராவிடென்ஸ், றோட் தீவு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 72)
கல்விப் பணி | |
துறை | அறிவியல் வரலாறு |
கல்வி நிலையங்கள் | பிரௌன் பல்கலைக்கழகம் கோர்னெல் பல்கலைக்கழகம் |
டேவிட் எட்வின் பிங்கிரி (David Edwin Pingree (பிறப்பு:2 சனவரி 1933-இறப்பு:11 நவம்பர் 2005), பண்டைய உலகின் கணிதவியல் வரலாற்று அறிஞர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் பிரௌன் பல்கலைழக்க்கழகத்தில் பண்டைய உலகின் கணிதவியல் மற்றும் வானியல் வரலாற்றுப் பேரராசிரியாக பணியாற்றியவர். [1]பண்டைய கிரேக்க வானியல் நூலின் சமசுகிருத வடிவமான யவன ஜாதகம் எனும் சோதிட நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்கு மிகவும் அறியப்பட்டவர்
1960ம் ஆண்டில் டேவிட் பிங்கிரி, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் எலனியக் கால கிரேக்க சோதிடம் இந்தியாவில் அறிமுகப்பட்டது என்ற ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.[2] பின்னர் கீழை நாடுகளின் படிப்பிற்காக சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இணை ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். டேவிட் எட்வின் பிங்கிரி 1971ல் பிரௌன் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் வரலாற்றுப் பேரராசிரியாக இறக்கும் வரை பணியில் இருந்தார்.[3]