டைகந்தகம் டையாக்சைடு(Disulfur dioxide) என்பது S2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். இருகந்தக ஈராக்சைடு, இருபடி கந்தக மோனாக்சைடு, கந்தக மோனாக்சைடு இருபடி என்று பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. கந்தகத்தின் ஆக்சைடு [2]என்று பொதுவாகக் கருதப்படும் இந்த திண்மச் சேர்மம் நிலைப்புத் தன்மையற்றதாகும். அறைவெப்பநிலையில் சில வினாடிகள் மட்டுமே இருக்கின்ற ஆயுளை கொண்டதாகவும் இது உள்ளது [3].
C2v சமச்சீர்மை கொண்ட சிசு-சமதளக் கட்டமைப்பை டைகந்தகம் டையாக்சைடு ஏற்றுக் கொள்கிறது. S-O பிணைப்பின் பிணைப்பு நீளம் 145.8 பைக்கோ மீட்டர் ஆகும். இது கந்தக மோனாக்சைடிலுள்ள கந்தகம் ஆக்சிசன் பிணைப்பு நீளத்தை விட குட்டையனதாகும். S-S பிணைப்பிலுள்ள பிணைப்பின் நீளம் 202.45 பைக்கோ மீட்டர் ஆகும். OSS பிணைப்புகளுக்கு இடையேயான பிணைப்புக் கோணம் 112.7 பாகைகள் என கணக்கிடப்பட்டுள்ளது. 3.17 டி என்ற இரு முனைத் திருப்புத் திறன் அளவுடன்[4] சமச்சீர்மையற்ற மூலக்கூறாக S2O2 அடையாளப்படுத்தப்படுகிறது[1][5].
கந்தக மோனாக்சைடு (SO) தன்னிச்சையாகவும் தலைகீழாகவும் டைகந்தகம் டையாக்சைடாக (S2O2) மாறுகிறது[4].எனவே கந்தக மோனாக்சைடை உருவாக்கும் முறைகளால் இந்த பொருளையும் உருவாக்க முடியும்[5]. கந்தக டை ஆக்சைடில் மின்சுமையை வெளியேற்றப்படுவதன் மூலமும் டைகந்தகம் டையாக்சைடு உருவாகிறது.
கார்பன் ஆக்சிசல்பைடு அல்லது கார்பன் டைசல்பைடு ஆவியுடன் ஆக்சிசனை வினைபுரியச் செய்து தயாரிப்பது மற்றொரு ஆய்வகச் செயல்முறையாகும்[6].
தனிமநிலை கந்தகத்தின் பல்வேறு வடிவங்களும் h SO2 வாயுவுடன் சேர்வதில்லை என்றாலும் அணுநிலை கந்தகம் சேர்ந்து கந்தக மோனாக்சைடாக மாறுகிறது. இது இருபடியாக மாறுகிறது[7]
S + SO2 → S2O2
S2O2 ⇌ 2SO
ஈலியத்தில் நீர்த்த கந்தக டை ஆக்சைடில் நுண்ணலை மின்சுமை வெளியேற்றத்தின் வழியாகவும் டைகந்தக டை ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது[8]. அழுத்தம் 0.1 மில்லிமீட்டர் பாதரசமாக இருக்கும்போது விளைபொருளில் 5 சதவீதம் S2O2. ஆக உருவாகிறது[9]
ஐதரசன் சல்பைடும் ஆக்சிசனும் ஒளிப்பகுப்பிற்கு உட்பட்டு தற்காலிகமாக டைகந்தகம் டையாக்சைடு தோன்றுகிறது[10].
இடைநிலை தனிமங்களுடன் டைகந்தக டையாக்சைடு ஈந்தணைவியாக உருவாகிறது. இரண்டு கந்தக அணுக்களும் உலோக அணுவுடன் இணையும் வகையில் இது η2-S,S' என்ற நிலையில் பிணைகிறது[14]. 2003 ஆம் ஆண்டு முதன்முதலில் இது கண்டறியப்பட்டது. பிளாட்டினத்தின் அணைவுச் சேர்மமான பிசு(டிரைமெத்தில்பாசுபீன்) திரேன் எசு-ஆக்சைடை 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் தொலுயீனில் சூடாக்கும் போது எத்திலீனை இழந்து S2O2: (Ph3P)2PtS2O2 அணைவுச் சேர்மமாக உருவாகிறது[15].
இரிடியம் அணுக்களும் அணைவுச் சேர்மங்களாக உருவாக முடியும். இரிடியம் கலப்பு சோடியம் பெர்ரயோடேட்டு ஆக்சிசனேற்றமடைந்து 1,2-பிசு(டைபீனைல்பாசுபினோ)யீத்தேன் உருவாகிறது[16][17]. S2O2 இச்சேர்மத்தில் ஒரு பக்க மாற்றியன் நிலையில் உள்ளது. இதெ நிபந்தனைகளில் இதை மாறுபக்க மாற்றியனாகவும் மாற்ற முடியும். ஆனால் இதில் இரண்டு தனித்தனியான SO இயங்குறுப்புகள் காணப்படும். இண்டியம் அணைவுச் சேர்மத்தை டிரைபீனைல் பாசுபீனுடன் சேர்த்து சிதைக்கும்போது டிரைபீனைல் பாசுபீன் ஆக்சைடும் டிரைபீனைல் பாசுபீன் சல்பைடும் உருவாகின்றன[16].
வெள்ளி நட்சத்திரன் வளிமண்டலத்தில் சிறிதளவு டைகந்தக டையாக்சைடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு இதுவே பைங்குடில் விளைவுகளுக்கு பங்களிப்பதாக கருதப்படுகிறது[11]. புவியின் வளிமண்டலத்தில் டைகந்தக டையாக்சைடு இருப்பதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.
↑Mitchell, Stephen C. (3 September 2004). Biological Interactions Of Sulfur Compounds. CRC Press. p. 7. ISBN978-0203362525.
↑ 4.04.1Spectroscopic studies of the SO2 discharge system. II. Microwave spectrum of the SO dimer Lovas F. J., Tiemann E., Johnson D.R. The Journal of Chemical Physics (1974), 60, 12, 5005-5010 எஆசு:10.1063/1.1681015
↑Murakami, Yoshinori; Shouichi Onishi; Takaomi Kobayashi; Nobuyuki Fujii; Nobuyasu Isshiki; Kentaro Tsuchiya; Atsumu Tezaki; Hiroyuki Matsui (2003). "High Temperature Reaction of S + SO2→ SO + SO: Implication of S2O2Intermediate Complex Formation". The Journal of Physical Chemistry A107 (50): 10996–11000. doi:10.1021/jp030471i. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. Bibcode: 2003JPCA..10710996M.
↑Compton, R. G.; Bamford, C.H.; Tipper, C.F.H. (1972). "Oxidation of H2S". Reactions of Non-Metallic Inorganic Compounds. Comprehensive Chemical Kinetics. Elsevier. p. 50. ISBN978-0080868011.
↑Herron, J. T.; R. E. Huie (1980). "Rate constants at 298 K for the reactions sulfur monoxide + sulfur monoxide + M -> dimeric sulfur monoxi de + M and sulfur monoxide + dimeric sulfur monoxide -> sulfur dioxide + sulfur oxide (S2O)". Chemical Physics Letters76 (2): 322–324. doi:10.1016/0009-2614(80)87032-1. Bibcode: 1980CPL....76..322H.
↑Lorenz, Ingo-Peter; Jürgen Kull (1986). "Complex Stabilization of Disulfur Dioxide in the Fragmentation of ThiiraneS-Oxide on Bis(triphenylphosphane)platinum(0)". Angewandte Chemie International Edition in English25 (3): 261–262. doi:10.1002/anie.198602611. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-0833.
↑ 16.016.1Schmid, Günter; Günter Ritter; Tony Debaerdemaeker (1975). "Die Komplexchemie niederer Schwefeloxide, II. Schwefelmonoxid und Dischwefeldioxid als Komplexliganden". Chemische Berichte108 (9): 3008–3013. doi:10.1002/cber.19751080921. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940.