டோக்கியோ இளைஞர் அணி (Tokyo Boys) அல்லது டோக்கியோ பாய்ஸ் என்பது இந்திய தேசிய இராணுவத்தின் நாற்பத்தைந்து இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட பெயராகும். [1] இவர்கள் போர் விமானிகளாக பயிற்சி பெற யப்பானிய பேரரசின் இராணுவப் பள்ளிக்கோ அல்லது யப்பானிய இராணுவ விமானப்படை அகாதமிக்க்கோ 1944இல் சுபாஷ் சந்திர போஸால் அனுப்பப்பட்டனர். [2] [3] யப்பான் சரணடைந்த பின்னர் இவர்கள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ஆனால் ஐ.என்.ஏ விசாரணைகள் முடிந்த பின்னர் 1946 இல் விடுவிக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் இந்தியப் படைகளிலும், பர்மாவின் கடற்படையிலும், பாக்கித்தான் படைகளிலும் , தனியார் விமானிகளில் அதிகாரிகளாகவும் மாறினர். [4] இவர்களில் சிலர் அதிகாரிகளுமானார்கள் . [5]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)