டோக்ரா வம்சம் (Dogra dynasty )[1](ஆட்சிக் காலம்:1846–1949),
இந்து டோக்ரா இராசபுத்திர அரச மரபை 1846ஆம் ஆண்டில் நிறுவியவர், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா குலாப் சிங் ஆவார். டோக்ரா வம்ச மன்னர்களில் குலாப் சிங் மற்றும் ரண்பீர் சிங் ஜம்மு நகரத்தில் ரகுநாத் கோயிலை கட்டினர்.
பிரித்தானியா இந்திய அரசினர், 20 ஏப்ரல் 1887-இல் டோக்ரா படைவீரர்களைக் கொண்ட டோக்ரா படையணியை உருவாக்கினர்.[2]
ஜம்மு பகுதியின் மன்னர் ஜித் சிங், சீக்கியப் படைகளால் வெல்லப்பட்டப் பின்னர், குலாப் சிங்கின் தந்தை கிஷோர் சிங் ஜம்முவின் மன்னரானார். 1822இல் கிஷோர் சிங்கின் மறைவுக்குப் பின், குலாப் சிங், ஜம்முவின் மன்னராக, ரஞ்சித் சிங்கால் நியமிக்கப்பட்டார்.
முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரில், சீக்கியர்கள், காஷ்மீர் பகுதியை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். 84,471 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஷ்மீர் பகுதியை, ஆங்கிலேயர்கள், 16 மார்ச் 1846இல் அன்று, ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் ரூபாய் 27 இலட்சத்திற்கு விலைக்கு விற்று விட்டனர். [3] எனவே 16 மார்ச் 1846 முதல் குலாப் சிங் சம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானார்.
30 சூன் 1857இல் மன்னர் குலாப் சிங்கின் மறைவிற்கு பினனர் அவரது மகன் ரண்பீர் சிங் காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானார். [4] ரண்பீர் சிங் மற்றும் அவரது சித்தப்பா பிரதாப் சிங் ஆகியோர், காஷ்மீரின் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை தங்களின் அரசுடன் இணைத்துக் கொண்டனர்.
பிரித்தானிய இந்திய அரசில், ஜம்மு காஷ்மீர் இராச்சியம் பரப்பளவில் இரண்டாவது பெரிய மன்னராட்சிப் பகுதியாக இருந்தது.[5][6]
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 565 சுதேச சமஸ்தான மன்னர்களில், ஜம்மு காஷ்மீர் மன்னரான ஹரி சிங் மகாராஜாவிற்கு பிரித்தானிய இந்திய அரசு 21 முறை பீரங்கிகள் முழங்க மரியாதை செய்தது. மகாராஜா பிரதாப் சிங்கிற்குப் பிறகு ஹரி சிங் 1925இல் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜாவானர்.
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் அக்டோபர் 1947இல் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை இந்தியாவுடன் இணைக்க மன்னர் ஹரி சிங், உடன்படிக்கை செய்து கொண்டார்.[7] இதனால் பாகிஸ்தான், காஷ்மீர் குறித்து இந்தியாவுடன், காஷ்மீர் பிரச்சினை ஏற்பட்டதால், 1947-இல் இந்திய-பாகிஸ்தான் போர் மூண்டது.
ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங் இறந்த பின் அவரது மகன் கரண் சிங், சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு வழங்கி வந்த மன்னர் மானியத்தை 1971-இல் இந்திய அரசு நிறுத்துவதற்கு முன்பே, 1949இல் கரண் சிங் மன்னர் மானியம் பெறுவதைத் தானாகவே நிறுத்திக் கொண்டார். [8] பின்னர் கரண் சிங் 1952 முதல் 1964 முடிய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அதிபராகவும், பின்னர் பிரதம அமைச்சராகவும் பதவி வகித்தார்.[9]
Before partition, the princely state of Kashmir was the largest in land area.