தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அந்தோனி ரால்ஃப் மாரினன் ஒப்பாத்த | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கொழும்பு, இலங்கை | 5 ஆகத்து 1947||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 11 செப்டம்பர் 2020 கொழும்பு | (அகவை 73)||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கைத் துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 6) | 7 சூன் 1975 எ. மேற்கிந்தியத் தீவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 16 சூன் 1979 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 24 திசம்பர் 2014 |
டோனி ஒப்பாத்த (Tony Opatha) என அழைக்கப்படும் அந்தோனி ரால்ஃப் மாரினன் ஒப்பாத்த (Ralph Marinon Opatha, 5 ஆகத்து 1947 – 11 செப்டம்பர் 2020) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] வலக்கை நடுத்தரப் பந்து வீச்சாளரான இவர், 1975, 1979 உலகக்கிண்ணப் போட்டிகளில் ஐந்து ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றினார்.
கொழும்பு புனித பீட்டர் கல்லூரியில் கல்வி பயின்று, கல்லூரி துடுப்பாட்ட அணியில் விளையாடினார். 1968 இல் இலங்கை வான்படையில் இணைந்து, வான்படையின் துடுப்பாட்ட அணியில் 1977 வரை விளையாடினார். இலங்கைத் துடுப்பாட்ட அணியில் 1971 இல் முதல் தடவையாக விளையாடினார். 1975, 1979 இங்கிலாந்து உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றினார். இவர் பின்னர் 1979 இல் அயர்லாந்து துடுப்பாட்டக் குழுவில் விளையாடினார்.[2]
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிரான தடை உத்தரவை மீறி 1982-83 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவுக்கான எதிர்ப்புக் குழுப் போட்டிகளில் இவர் விளையாடியமைக்காக இவருக்கு பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆயுள்-காலத் தடை விதிக்கப்பட்டது.
செப்டம்பர் 2018 இல், இலங்கைத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் முழுமையான உறுப்புரிமையைப் பெறுவதற்கு முன்னர் இலங்கைத் துடுப்பாட்டத்தில் பங்களித்த 49 முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் இவரும் கௌரவிக்கப்பட்டார்.[3][4]
சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த டோனி ஒப்பாத்த 2020 செப்டம்பர் 11 அன்று கொழும்பில் தனது 73-வது அகவையில் காலமானார்.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)