டோலு குனித்தா

டோலு குனித்தா( கன்னடம் : ಡೊಳ್ಳು ಕುಣಿತ), கர்நாடகாவின் ஒரு பிரபலமான மத்தள இசை நடனமாகும்.[1]

குழு நடனம்

[தொகு]
Colourfully-dressed women dancing
பெண்களால் நிகழ்த்தப்படும் டோலு குனித்தா

இது டோலு எனப்படும் ஒரு மத்தளம் போன்ற இசைக்கருவி கொண்டு நிகழ்த்தப்படும் ஒரு குழு நடனமாகும். இதனை பொதுவாக குருபா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இந்த குழுவில் குறைந்தது 10 முதல் 16 நடனக் கலைஞர்கள் இருப்பார்கள், ஒவ்வொருவரும் தாளக் கருவி அணிந்து நடனமாடும்போது வெவ்வேறு தாளங்களை வாசிப்பார்கள். மையத்தில் ஜால்ராக்கள் கொண்டு ஒரு தலைவரால் தாளத் துடிப்பு இயக்கப்படுகிறது. மெதுவான மற்றும் வேகமான தாளங்கள் மாறி மாறி இசைக்கப்படும் பொழுது நடனக்குழு பல்வேறு மாறுபட்ட நடனவடிவத்தை குழுவாக நிகழ்த்துவார்கள். பெரும்பாலும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டாலும் தற்போது'பெண்களாலும் டோலு குனித்தா நிகழ்த்தப்படுகிறது. இதற்கான ஆடைகள் எளிமையானவை; உடலின் மேல் பகுதி வழக்கமாக வெறுமனே விடப்படும், அதே சமயம் ஒரு கருப்பு தாள் வேட்டியின் மேல் உடலில் கட்டப்படும். 1987 இல் கே.எஸ் ஹரிதாஸ் பட் தலைமையில் ஒரு குழுவினர் சோவியத் ஒன்றியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். மாஸ்கோ, லெனின்கிராட், வைப்ராக், ஆர்சன்கேல்ச்க், ஸ்கோவ், மர்மேந்ஸ்க், தாஷ்கண்ட் மற்றும் நோவோகிராட் ஆகிய இடங்களில் இவர்கள் இந்த நடனநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள்.

தொன்ம கதை பின்னணி

[தொகு]

இசை நடனத்தின் தோற்றத்தைப் பற்றிய புராண கதை வாய்வழி பாரம்பரியமாக  'ஹலுமத புராணம்' அல்லது குருபபுராணம் என கருநாடகத்தில்  சொல்லப்பட்டு வருகிறது. தொல்லா என்றஅசுரன்/அரக்கன் சிவனை பக்தியுடன் வணங்கி வந்தான். அவன் பக்தியை மெச்சிய சிவன் அவன் முன் தோன்றி வேண்டும் வரத்தை கேள் என்ற போது, அவன் சிவனையே விழுங்க வேண்டும், இல்லையெனில் சாகாமை வேண்டும் என கோருகிறார், சாகாமையை மறுத்த சிவனை அந்த அரக்கன் சிவனை விழுங்கினார். அவன் வயிற்றிக்குள் சென்ற சிவன் பின்னர் பெரிதாக வளர ஆரம்பித்தார். வலி தாங்க முடியாத அசுரன், சிவனை வெளியே வரும்படி கெஞ்சினான். சிவன் அரக்கன் வயிற்றைக் கிழித்து, அவனைக் கொன்றுவிட்டு வெளியே வந்தார். மேலும் சிவன் அந்த அசுரனின் தோலைப் பயன்படுத்தி ஒரு டோல்/மத்தளம் செய்து அதை பக்தர்களான '"ஹாலு குருபாக்கள்'" என்ற கிராமவாசிகளுக்கு வழங்கினார். ஷிமோகாவில் உள்ள குருபா பழங்குடியினர் இன்றும் இந்த பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "டோலு குனித்தா".