டோஸ்மோச்சே

டோஸ்மோச்சே
லே அரண்மனையில் டோஸ்மோச்சே பண்டிகையின்போது ஆடப்படும் சம் நடனம்
கடைப்பிடிப்போர்புத்தமதம்
வகைபுத்தமதம் சார் புத்தாண்டுத் திருவிழா
முடிவுபிப்ரவரி
நிகழ்வுவருடத்திற்கு ஒருமுறை

 

டோஸ்மோச்சே என்பது இந்தியாவின் லடாக்கில் கொண்டாடப்படும் ஒரு புத்த பண்டிகையாகும். இது லே, லிகிர் மற்றும் டிஸ்கிட் மடாலயங்களில் கொண்டாடப்படுகிறது. [1]இது லோசர் புத்தாண்டு பண்டிகையைப் போலவே புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி திருவிழா ஆகும்.[2] இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த டோஸ்மோச்சே திருவிழாவின் போது லே மாவட்டம் மற்றும் ஜான்ஸ்கர் துணைப் பிரிவுக்குக் கட்டாய அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. டோஸ்மோச்சே "பலிகடாவின் திருவிழா" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது லடாக்கின் மிகவும் பிரபலமான பிரார்த்தனை திருவிழாக்களில் ஒன்றாகும். [3] ஊரை தீய சக்திகளிடமிருந்து தூய்மைப்படுத்தும் நம்பிக்கையின் பேரிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வரலாறு

[தொகு]

லடாக் ஆட்சியாளர்களால் டோஸ்மோச்சே பண்டிகை தொடங்கப்பட்டது. [4][5] லாச்சென் கோங்டுப் / லா-சென்-டனோஸ்-க்ரப் (1295-1320) அரசரின் ஆட்சியின் போது இத்திருவிழா தொடங்கப்பட்டது.[5] அழிவை ஏற்படுத்தும் படையெடுப்புக்ளுக்கு எதிராக அவர் நியுங்டி (இமாச்சலப் பிரதேசத்தின் குலு) படையெடுப்பாளர்களுடன் இரண்டு போர்களை நடத்தினார். [5] சாம் நடனம் என்று அழைக்கப்படும் புனித முகமூடி நடனங்கள், லே அரண்மனையின் வாயில்களுக்குக் கீழே பழைய தேவாலயத்தின் முற்றத்தில் நடத்தப்படுகின்றன. [6] இந்தத் திருவிழாவிற்காகச் சுழற்சி அடிப்படையில் லடாக்கின் பல்வேறு மடங்களிலிருந்து லாமாக்கள் அழைத்துவரப் படுகின்றனர்.

கொண்டாட்டங்கள்

[தொகு]

மேள தாளங்களுடன் வெற்று பாறைச் சரிவுகளில் சீரான இடைவெளியில் சங்குகளின் ஓசையுடன் கூடிய உயரமான கியாலிங் ஒலி எழுப்பப்பட்டு எதிரொலிக்கப்படுகிறது. [5] புத்தர் உட்பட பல்வேறு வகையான தெய்வங்களைக் குறிக்கும் வகையில்துறவிகள் பலவண்ண ஆடைகள் மற்றும் பலவிதமான முகமூடிகளில் கவர்ச்சியாகத் தோன்றுகின்றனர்.[5] தீமையைத் தடுக்கவும் உலகளாவிய அமைதி மற்றும் மகிழ்ச்சியை வரவேற்கவும் வண்ணமயமான படபடப்பு எழுச்சியுடன் அவர்கள் துடிப்புக்கு நடனமாடுவார்கள். [5] முகமூடி நடனங்கள் மகாயான பௌத்தத்தின் தாந்த்ரீக பாரம்பரியத்தின் இன்றியமையாத பகுதியாகும்.[7]

மோதி சந்தையிலிருந்து லே பஜார் தெருவின் மறுமுனை வரை ஒரு கிலோமீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான விற்பனைக் கடைகள் இரண்டு நாள் திருவிழாவிற்காக அமைந்திருக்கும். இவை மிகவும் பிரபலமானவை.[8] லாட்டரிகள், தம்போலா போன்ற விளையாட்டுகளுக்காகவும், கடைவலங்களுக்காவும் ஆயிரக்கணக்கான மக்கள் பலவண்ண ஆடையலங்காரங்களுடன் லே பஜார் தெருவில் குவிகின்றனர். [7]

அட்டவணை

[தொகு]

திபெத்திய சந்திர நாட்காட்டியை திபெத்து பின்பற்றுவதாலும், திபெத்திய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதத்தில், இருபத்தி எட்டாவது மற்றும் இருபத்தி ஒன்பதாம் தேதிகளில் டோஸ்மோச் திருவிழா வருவதாலும் ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் நாட்காட்டியில் வெவ்வேறு தேதியில் திருவிழா நடைபெறும்.[9]


ஆண்டு தேதி
2014 27-28 பிப்ரவரி
2015 17-18 பிப்ரவரி
2016 6-7 பிப்ரவரி
2017 24-25 பிப்ரவரி
2018 13-14 பிப்ரவரி
2019 2-3 பிப்ரவரி
2020 21-22 பிப்ரவரி
2021 12-13 பிப்ரவரி
2022 28 பிப்ரவரி - 1 மார்ச்
2023 18-19 பிப்ரவரி

படக்கோப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dosmoche Festival
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Leh, Likir Dosmoche begins". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
  2. "Dosmoche Festival". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
  3. "Dosmoche: Festival of the Scapegoat". Ladakh-Leh.com. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
  4. Antiquities of Indian Tibet. Asian Educational Services. 1992. pp. 98–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0769-9.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "Ladakh celebrates winter festival of 'Dosmoche'". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
  6. "Likir Festival in Likir Gompa". india.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2018.
  7. 7.0 7.1 "'Leh, Likir Dosmoche begins'". பார்க்கப்பட்ட நாள் 3 March 2018.
  8. Usha Sharma (1 January 2008). Festivals In Indian Society (2 Vols. Set). Mittal Publications. pp. 107–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-113-7.
  9. "Calendar of Monastic festival". Leh official website. http://leh.nic.in/tourist/calender.html.