டௌரி கல்யாணம் | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | டி.எஸ்.சீனிவாசன். |
கதை | விசு |
இசை | எம்.எஸ்.விஸ்வநாதன் |
நடிப்பு | விசு மனோரமா ஸ்ரீவித்யா எஸ்.என்.பார்வதி விஜயகாந்த் விஜி சந்துரு டெல்லி கணேஷ் பிந்து கோஷ் கிஷ்மு எம்.என்.நம்பியார் எம்.ஆர்.ராஜாமணி புஷ்பலதா எஸ்.வி.சேகர் சுந்தரவல்லி வி.கோபாலகிருஷ்ணன் வீ.கே.ராமசாமி |
ஒளிப்பதிவு | என்.பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | என்.ஆர்.கிட்டு |
வெளியீடு | சூலை 01, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டௌரி கல்யாணம் என்பது 1983ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மத்தியவர்க்கக் குடும்பத்தில் உள்ள ஒரு அண்ணன் தனது தங்கைக்குத் திருமணம் நடத்துவதற்குள் என்ன என்ன பாடுபடுகிறான் என்பதைக்காட்டும் படம். வரதட்சணை என்னும் சமூகத்தீமை எப்படியெல்லாம் ஒருசாதாரண குடும்பத்தை வதைக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. தங்கைக்காக அனைத்து உறவினர்களிடமும் உதவி கோரி கடிதம் எழுதுகிறார் அண்ணன். உறவினர்கள் உதவினரா, திருமணம் நடந்ததா என்பதை நகைச்சுவையுடனும் விறுவிறுப்புடனும் சொல்லும் சமூகத் திரைச்சித்திரம்.