ரி. எம். சபாரத்தினம் T. M. Sabaratnam | |
---|---|
இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1924–1931 | |
பின்னவர் | பேரா. செ. சுந்தரலிங்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முல்லைத்தீவு | 16 சனவரி 1895
இறப்பு | 23 சனவரி 1966 முல்லைத்தீவு | (அகவை 71)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
துணைவர் | வாலாம்பிகை அழகம்மா |
பிள்ளைகள் | புலேந்திரா சபாரத்தினம், சகுந்தலா நல்லையா |
முன்னாள் மாணவர் | கொழும்பு ரோயல் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
தம்பையா முதலியார் சபாரத்தினம் (Thambaiyah Mudaliyar Sabaratnam, 16 சனவரி 1895 - 23 சனவரி 1966) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக 1924 முதல் 1931 வரை வட மாகாணத்தின் கிழக்குப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
ரி. எம். சபாரத்தினம் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் சட்டக் கல்வியை கொழும்பு சட்டக் கல்லூரியில் முடித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2] வாலாம்பிகை அழகம்மா என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ராசக்கோன் புலேந்திரா, சகுந்தலா நல்லையா என்ற இரு பிள்ளைகள்.
1924 தேர்தலில் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக வட மாகாணத்தின் கிழக்குப் பகுதிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இப்பதவியை அவர் 1931 ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். பின்னர் 1947 நாடாளுமன்றத் தேர்தல்[4], மற்றும் 1952 தேர்தல்களில்[5] அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1924 சட்டவாக்கப் பேரவை | வட மாகாணம் கிழக்கு | - | தெரிவு | |
1947 நாடாளுமன்றம்[4] | வவுனியா | தமிழ் காங்கிரசு | 2,018 | தோல்வி |
1952 நாடாளுமன்றம்[5] | வவுனியா | தமிழ் காங்கிரசு | 1,398 | தோல்வி |
சபாரத்தினம் இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் நிருவாக உறுப்பினராகவும்[6] பின்னர் வற்றாப்பளை அம்மன் கோவில் அறங்காவல் தலைவராகவும் சேவையாற்றினார்.[7]