4°23′N 102°24′E / 4.383°N 102.400°E
தகான் ஆறு Tahan River Sungai Tahan | |
---|---|
அமைவு | |
நாடு | மலேசியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | தித்திவாங்சா மலைத்தொடர் |
⁃ அமைவு | தாமான் நெகாரா |
முகத்துவாரம் | பகாங்: குவாந்தான், தென்சீனக் கடல் |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | குவாந்தான் மாவட்டம், லிப்பிஸ் மாவட்டம், பெக்கான் மாவட்டம், கோலா தகான், கோலா தெம்பிலிங், |
வடிநிலம் | குவாந்தான்; |
தகான் ஆறு; (மலாய்: Sungai Tahan; ஆங்கிலம்: Tahan River) என்பது மலேசியாவின் நீளமான ஆறுகளில் ஒன்றாகும். மலேசியாவின் பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத்தொடரில் (Titiwangsa Mountains) உருவாகி தாமான் நெகாரா (Taman Negara) எனும் தேசியப் பூங்கா வழியாகச் சென்று தென் சீனக் கடலில் (South China Sea) கலக்கிறது.
கோலா தகான் எனும் கிராமப்புர நகரத்தின் பெயர் இந்த ஆற்றுக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த நதி தீபகற்ப மலேசியாவின் மிக உயரமான மலையான தகான் மலையில் உருவாகிறது.
குனோங் தகான் அல்லது தகான் மலை (Mount Tahan); தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலையாகும். மலேசியாவில் குனோங் தகான் என்றே பரவலாக அழைக்கப் படுகிறது. பகாங், ஜெராண்டுட் நகரில் இருந்து 76 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
தகான் மலையின் உயரம் 2,187 மீட்டர், (7,174 அடி). இந்த மலை தகான் மலைத்தொடரில் அமைந்து இருக்கிறது.
தகான் மலைத்தொடர் என்பது தெனாசிரிம் மலைத்தொடரில் ஒரு பகுதியாகும். தென்னாசிரிம் மலைத்தொடர் என்பது தென்கிழக்காசியாவில் 1,700 கி.மீ. நீளத்திற்கு பர்மா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா நாடுகளில் படர்ந்து இருக்கும் ஒரு மலைத்தொடராகும்.[1]
தீபகற்ப மலேசியாவில் உள்ள மலைகளில் குனோங் தகான் மலையில் ஏறுவதற்கு கடினமாக இருக்கும் என்று மலையேறுபவர்கள் கருத்து கூறுகின்றனர்.[2]
தாமான் நெகாரா (Taman Nagara) என்பது ஒரு தேசியப் பூங்காவாகும். 4,343 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. உலகிலேயே மிகப் பழமையான வெப்ப மண்டல மழைக்காடுகளைக் கொண்ட வனப்பூங்கா என்றும் புகழ்பெற்றது. இந்தக் காடுகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.[3] [4] இங்கு தான் தகான் மலை அமைந்து இருக்கிறது.
கோலா தகான் சிறுநகரில் இருந்து, தகான் மலையை அடைவதற்கு 54 கி.மீ. காட்டுப் பயணப்பாதை உள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களே மலை ஏறுவதற்கு பொருத்தமான காலம் ஆகும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரையிலான மழைக் காலங்களில், மலையேறும் பயணங்கள் ரத்துச் செய்யப் படுகின்றன.
பொதுவகத்தில் Taman Negara National Park பற்றிய ஊடகங்கள்