தக் (இசைக்கருவி)

தாகேசுவரி கோயிலுள்ள ஒரு தக் கருவி

தக் (Dhak) என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு இசைக்கருவியாகும். இது கால்நடைகளின் தோல் மூலம் உருவாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட உருளையிலிருந்து பீப்பாய் வரை இதன் வடிவங்கள் வேறுபடுகின்றன. வாய்ப் பகுதியில் மேல் தோலை நீட்டுவது மற்றும் இழுத்துக் கட்டும் முறையும் மாறுபடும். இது கழுத்திலிருந்து இடுப்பு வரை கட்டப்பட்டு, மடியில் அல்லது தரையில் வைத்து, பொதுவாக மரக் குச்சிகளால் இசைக்கப்ப்படும். இடது பக்கம் ஒரு கனமான ஒலியைக் கொடுக்க மாவு போன்ற பொருள் பூசப்படும். [1]

மேளம் அடிப்பது துர்கா பூஜையின் ஒரு அங்கமாகும்.[2] இது பெரும்பாலும் பெங்காலி இந்து சமூகத்தால் இசைக்கப்படுகிறது.

"தக்" இசையின் சப்தம் இல்லாமல் துர்கா பூஜை நிறைவடையாது என தி ஸ்டேட்ஸ்மேன் எழுதியது. இரண்டு மெல்லிய குச்சிகளை கொண்டு உருவாக்கும் இசை கேட்போருக்கு பரவசத்தை செலுத்துகிறது. அந்த மயக்கும் துடிப்புகள் துர்கா பூஜையின் காட்சிகள் மற்றும் வாசனைகளை கற்பனை செய்ய போதுமானது." [3]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Instruments". Percussions. beatofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-13.
  2. "Traditions of Durga Puja". Society for confluence of festivals in India. பார்க்கப்பட்ட நாள் 2008-01-13.
  3. "Beats of changing time".