தக்கணக் கல்விச் சங்கம் (மராத்தி: डेक्कन एज्युकेशन सोसायटी, ஆங்கிலம்: Deccan Education Society) என்பது மகாராட்டிரத்தில் 43 கல்வி நிறுவனங்களைச் செயல்படுத்திவரும் பூனாவைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
1880 ஆம் ஆண்டில் விஷ்ணுசாஸ்த்ரி சிப்லுன்கரும் பால கங்காதர திலகரும் மகாதேவ் பல்லல் நம்ஜோஷியும் பூனாவில் நியூ இங்லிஷ் ஸ்கூலைத் தொடங்கினர்.[1] ஆங்கிலேய அரசாலும் கிறித்துவ சமயப் பரப்பாளர்களாலும் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் மட்டுமே பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியளிக்கும் நிலை இருந்தகாலத்தில் 1884 ஆம் ஆண்டு கோபால் கணேஷ் அகர்கர், வி எஸ் ஆப்தே, வி பி கேல்கர், எம் எஸ் கோலே, என் கே தாராப் ஆகியோருடன் இணைந்து தக்கணக் கல்விச் சங்கத்தை உருவாக்கினர்.[2][3] மக்களுக்கு கல்வித் தொண்டாற்றும் நோக்கில் உருவக்கப்பட்ட இச்சங்கத்தில் கோகலே கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார்.